states

பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திய பிறகு, பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 3- தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள்  கழகத்தின் மாநிலத் தலைவர் மா. ரவிச்சந்திரன் பள்ளிக்கல்வி ஆணையருக்கு அமைப்பின் அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த காலங்களில் மாறுதல் கலந்தாய்வுகளுக்கான அட்டவணையை கல்வித்துறை வெளியிடும் போது முதல்  பொது மாறுதல் கலந்தாய்வை முன்னிறுத்தி பின்பு பதவி உயர்வு கலந்தாய்வு நடை பெறுமாறு கலந்தாய்வு  அட்டவணையை உருவாக்கி  எவருக்கும் பாதிப்பு இல்லாமல் வெளியிடப்படும்.   அதே போல் கடந்த (2021-2022)  கல்வியாண்டிலும் பின்பற்றப்பட்டது. ஆனால் இந்த கல்வியாண்டில் மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்ற அறி விப்பு நடைமுறைக்கு அப்பாற்பட்டு பொது  மாறுதல் கலந்தாய்வை புறந்தள்ளி, பதவி உயர்வு கலந்தாய்வை முன்னிறுத்து வது ஏற்புடையது அல்ல, மேலும் இஎம்ஐ எஸ் (EMIS) வழியாக கலந்தாய்வு நடை பெறும் போது அரசுக்கு எந்தவித பொருட் செலவோ இழப்பீடோ எதுவும் இல்லை. தலைமையாசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் நீண்ட நெடிய தூரத்தில் பணி  செய்து வருகிறார்கள், அவர்களின் மனநிலை, மற்றும்  குடும்ப சூழ்நிலை ஆகி யவைகளை கருத்தில் கொண்டு முதலில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி, பின்பு பதவி உயர்வு கலந்தாய்வை நடத்திட வேண் டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆசிரியர் பணி நியமன அரசாணையை ரத்து செய்க! 

மற்றொரு அறிக்கையில்,  தமிழக அரசானது ஆசிரியர் பணிக்கென்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முறையாக தேர்ச்சி பெற்று 2013 இல் இருந்து இன்று வரை வேலையில்லாமல்   காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை காலியாக உள்ள சுமார் 13331 ஆசிரியர் காலிப் பணியிடங்களில் நியமனம் செய்ய வேண்டும்  .தமிழக அரசானது  கிராமப்புற மாணவர்களின் கல்விச் சூழலை கணக்கில் கொண்டு அனுபவம் இல்லாத பள்ளி மேலாண்மைக்குழு மூலம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர் பயிற்சி பெற்று வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

;