states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கட்டுமான வாரிசுதாரர்களுக்கு நிவாரணம்

சென்னை,ஜூலை 6- பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் நியமனதாரர்கள் மற்றும் வாரிசுதாரர்க ளுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலா ளர்கள் நல வாரியத்தின் சார்பில் தலா ரூ.5 லட்சம் வீதம், மொத்தம் ரூ.3 கோடி  வழங்கும் அடையாளமாக 7 நியமன தாரர்கள்-வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகைக்கான ஆணைகளை தலைமை  செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார்.

10,000 ஆசிரியர்கள் தேர்வுக்கு புதிய அட்டவணை வெளியீடு

சென்னை, ஜூலை 6- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தின்படி, இந்த ஆண்டு 10,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரி யர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில், இந்தாண்டு 10,000 ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்யவுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன் முழு விவரம்: அதன்படி 155 விரிவுரையாளர்கள், 1874  உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், 3, 987நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், 1358  கலை, அறிவியல் கல்லூரி உதவி பேராசிரி யர்கள், 493 பாலிடெக்னிக் கல்லூரி உதவி  பேராசிரியர்கள், 97பொறியியல் கல்லூரி  உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படு கிறார்கள்.

கடல் சீற்றம்  5ஆவது நாளாக நீடிப்பு

நாகர்கோவில் ,ஜூலை 6- குமரி மாவட்டத்தில் ஆரல்வாய் மொழி, குளச்சல், தக்கலை, திருவட்டார், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், கடல் அலையின் சீற்றம் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பும் எனவும்  காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திற்கு வீசும் என வானிலை  மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்  என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

 

 

;