states

21-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ரணில் ஏற்பாடு

கொழும்பு, மே 17 - இலங்கையில் ஜனாதிபதியின் அதி காரங்களை கட்டுப்படுத்தும் வகையில் 21-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்று இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரி வித்துள்ளார். இலங்கையில் நீண்டகாலமாக முக்கிய அதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கே இருந்து வருகிறது. 2015-ஆம் ஆண்டு ஏப்ரலில்  5-ஆவது முறையாக பிரதமரான ரணில்  விக்கிரமசிங்கே, ஜனாதிபதியின் அதிகா ரத்தைக் குறைக்கும் 19-ஆவது சட்டத்  சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி னார். அது பிரதமரை தனது விருப்பப்படி பதவி நீக்கம் செய்யும் ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்கியது.

மரணம், ராஜினாமா அல்லது வேறு விதமாக பிரதமர் பதவியில் இருந்து விலகி னால் அல்லது அரசாங்கக் கொள்கை அறிக்கையை நாடாளுமன்றம் நிராகரித்தால் அல்லது நாடாளுமன்றம் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால் மட்டுமே அமைச்சர வையைக் கலைக்க முடியும் என்பதை உறுதிப் படுத்தும் வகையில் இலங்கை அரசிய லமைப்பின் 46 (2) மற்றும் 48 வது பிரிவுகள் திருத்தப்பட்டன. மேலும், பிரதமரின் ஆலோசனை பேரிலேயே ஜனாதிபதி நடந்து  கொள்ள வேண்டும் என்பதன் மூலம் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் ஜனாதிபதியின் அதிகாரமும் நீக்கப்பட்டது. ஆனால், 2019-ஆம் ஆண்டு ஜனாதிபதி யாக கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் பதவிக்கு வந்த பின்னர், அனைத்து நிகழ்வுகளும் தலைகீழாக  மாறின. 20-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் 19-ஆவது சட்டத்திருத்தம் நீக்கப்பட்டது. மீண்டும் ஜனாதிபதிக்கே அதிகாரம் வழங்கப்பட்டது.

தற்போது மக்கள் போராட்டத்தால் ராஜ பக்சே சகோதரர்கள் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள சூழ்நிலையில், 21-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் மீண்டும் ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கைகளை ரணில் விக்கிரசிங்கே கையில் எடுத்துள்ளார். இந்த மசோதா தொடர்பாக அட்டர்னி ஜெனரல் குழு வினருடன் ஆலோசனை நடத்தி அதன டிப்படையிலான சட்ட மசோதா அமைச்சரவை யின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இதனிடையே, புதிய சட்டமசோதா குறித்து, முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன  பலவேகய (SJB), ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன (SLPP) ஆகிய இரண்டுமே தனித்தனி முன்மொழிவுகளை அளித்துள்ளன.

முக்கிய நியமனங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை ஜனாதிபதியிடமிருந்து அரசியலமைப்புச் சபைக்கு மாற்றுவதை இரண்டு கட்சிகளின் முன்மொழிவுகளுமே வலியுறுத்தினாலும், சில வேறுபாடுகளையும் கொண்டிருக்கின்றன. அரசியலமைப்புச் சபையில் எம்.பி.க்கள் மற்றும் கட்சியை சாராத குடிமக்கள் இருந்திட வேண்டும், அமைச்சர்கள், பிரதி அமைச்சர் கள் மற்றும் இணை அமைச்சர்களை நிய மிப்பதற்கும் அமைச்சகங்களின் நோக்கம் மற்றும் செயற்பாடுகளை தீர்மானிப்பதற்கும் பிரதமரின் ஆலோசனையின் பேரிலேயே ஜனாதிபதி செயல்பட வேண்டும் என்று  இரண்டு முன்மொழிவுகளும் ஒத்துப்போகின்றன.

எஸ்ஜேபி (SJB) கட்சியின் முன்மொழி வில், ஜனாதிபதி ஐந்து வருட காலத்திற்கு நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படு வார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அவர் நீக்கப்படலாம். நாடாளுமன்ற கூட்டத் தொடரை விருப்பப்படி கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்ற விதிகளை குறிப்பிட்டுள்ளது. ஆனால், ராஜபக்சே-வின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி,  “நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நடை பெற்று இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, அதனை கலைக்கவோ அல்லது ஒத்தி வைக்கவோ ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

;