சென்னை,செப்.2- நடிகர் ரஜினிகாந்த்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சனிக் கிழமையன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அதிமுகவை கைப்பற்ற நடத்திய சட்ட போராட் டத்தில் தொடர் தோல்வியை ஓ. பன்னீர் செல்வம் சந் தித்துள்ளார்.இதனால் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அர சியல் வட்டாரத்தில் பேசப் பட்டு வருகிறது.இந் நிலையில் நடிகர் ரஜினி காந்த்தை ஓ. பன்னீர் செல் வம் சந்தித்துள்ளார். எடப் பாடி பழனிசாமிக்கு நெருக் கடி கொடுக்க பாஜக தலைமை இப்படியொரு வேலையை செய்கிறதோ என்று அரசியல் நோக்கர் கள் சந்தேகம் எழுப்பு கின்றனர்.