கோட்டயம், ஆக.16- கேரளத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள புதுப்பள்ளி தொகுதி இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர் ஜெயிக் சி.தாமஸ் புதனன்று (ஆக.16) வேட்புமனு தாக்கல் செய்தார். கோட்டயம் ஆர்.டி.ஓ.விடம் மூன்று செட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எல்டிஎப் மாவட்ட கன்வீனர் லோபஸ் மேத்யூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி.ரஸ்ஸல், சிபிஐ மாவட்டச் செயலர் வி.பி.பினு, என்சிபி மாநிலத் துணைத் தலைவர் கே.ஆர்.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலையில் நடைபெற்ற தொகுதி மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தொடக்கி வைத்தார். இதில் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மறைவைத் தொடர்ந்து, புதுப்பள்ளி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. (மேலும் விபரம் 8 )