சென்னை, மே 22- தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுமார் 14 ஆயிரம் தனியார் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் முடிவுக்கு வருவதை ஒட்டி, புதிய கட்டண நிர்ணய அறிவிப்பினை உடனடி யாக வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது; தனியார் பள்ளிகள் கட்டண விகி தங்களை முறைப்படுத்த வேண்டு மென மாணவர் இயக்கமும், பெற்றோரும் பலகட்ட போராட்டங் களை நடத்தினர். இந்த பின்னணி யில், தனியார் பள்ளி கட்டண நிர்ண யக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு 2011-ஆம் ஆண்டு முதல் தனி யார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ண யம் செய்கிறது. இப்போது நீதிபதி ஆர்.பாலசுப்பிரமணியம் தலைமை யில் செயல்பட்டுவரும் குழுவின் கட்டண அறிவிப்பு சம்பந்தமான முடிவு வரவுள்ள சூழலில், புதிய விகிதங்களை நிர்ணயித்து உடன டியாக வெளியிட வேண்டும்.
பல தனியார் பள்ளிகளில் மாண வர் சேர்க்கை ஏற்கனவே தொடங்கி விட்டதாக தெரிகிறது. கோவை மாநகரத்தில் பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதற்காக பெற் றோர்கள் தங்களின் தங்க நகை களை விற்பதாக செய்திகள் வரு கின்றன. எனவே, நியாயமான கட்டண விகிதத்தை உடனடியாக நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 25 சதவீதம் பேர் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி சேர்க்கை மேற் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களின் கல்விக் கட்டணங்களை அரசே வழங்கி வருகிறது. மாநிலம் முழு வதும் சுமார் 80 ஆயிரம் மாண வர்கள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. அவர்களிடம் எந்த கூடுதல் தொகையும் வசூலிக்கப் படக் கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சூழலில், அனைத்து பெற்றோரிடத்திலும் அதிக கல்வி கட்டணம் மற்றும் நன் கொடை வசூலிப்பதை தடுக்கவும், அரசின் கட்டண விகிதங்களை வெளியிடுவதுடன், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படை யில் விண்ணப்பம் செய்வோருக்கு உரிமையை உறுதி செய்யும் விதத் தில் நடவடிக்கைகளை துரிதப் படுத்த வேண்டுமெனவும், தனியார் பள்ளிகளின் அடிப்படை உட்கட்ட மைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அரசு ஆய்வுக்கு உட்படுத்தி நியாயமான கல்விச் செயல்பாட்டை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.