இன்று குரூப் 4 தேர்வு : 22 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10-ம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) தேர்வு நடைபெறுகிறது. ஆண்கள் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 பேர், பெண்கள் 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டும் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆடிக்கிருத்திகைக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
ஆடிக் கிருத்திகை திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தில்லி ரயில் நிலையத்திலேயே பாலியல் வன்கொடுமை!
புதுதில்லி ரயில் நிலையத்திலேயே பெண் ஒருவர், ரயில்வே ஊழியர்கள் 2 பேரால் கும்பல் பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ரயில் தண்டவாள பராமரிப்புப் பணிகளுக் காக தண்டவாளம் அருகே அமைக்கப்பட்டிருந்த குடிசையில் பெண்ணுக்கு இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. தற்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் 2 பேரும், அவர் களுக்கு உடந்தையாக இருந்த ரயில்வே ஊழியர்கள் 2 பேருமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கிக் கணக்கு விவகாரம்: ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம்
சென்னை,ஜூலை 23- அதிமுகவின் 7 வங்கிக் கணக்கு களை முடக்க வேண்டும் என சென்னை மண்டல ரிசர்வ் வங்கி இயக்குநருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள் ளார். அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகவும், திண்டுக்கல் சீனி வாசன் பொருளாள ராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்தது குறித்து எடப்பாடி பழனிசாமி வங்கிகளுக்குக் கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வ மும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு அன்றே கடிதம் எழுதி யிருந்தார். அந்த கடிதத்தில், “என்னைக் கேட்காமல் வங்கி வரவு, செலவு கணக்கு களை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. நான்தான் கட்சியின் பொருளாளராகத் தொடர்கிறேன். கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவா சனை நியமனம் செய்தது செல்லாது. இந்நிலையில், ஓபிஎஸ் கடிதத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி அவரின் கடிதத்தை வங்கிகள் நிராகரித்தன. மேலும் எடப்பாடி பழனி சாமியின் கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என சென்னை மண்டல ரிசர்வ் வங்கி இயக்கு நருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
ரேசன் அரிசி கடத்தலை தடுக்க குழு அமைப்பு
சென்னை,ஜூலை 23- தமிழ்நாட்டில் ரேசன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக 4 காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்க ளிடம் கூறிய அவர், “தமிழ்நாட்டில் 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் இருப்பில் உள்ளது. இதற்கான சேமிப்பு கிடங்கும் போதுமானதாக உள்ளது” என்றார். தமிழ்நாட்டில் 9 லட்சம் மெட்ரிக் அரிசி வீணாகி உள்ளதாக பத்திரிகை களில் வெளிவந்த செய்திகள் தவறா னவை. 92,500 கிலோ அரிசி மட்டுமே வீணாகியது. வடகிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நெல் மற்றும் அரிசிகளை பாதுகாக்க நபார்ட் மற்றும் தனியார் பங்களிப்புடன் புதிய கொள்முதல் நிலையங்கள் அமைப் பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் விருது வழங்கும் விழா
சென்னை, ஜூலை 23- விடுதலை சிறுத்தை விருதுகள் வழங்கும் விழா குறித்து கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் கூறியிருப் பதாவது:- ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக் காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் அம்பேத்கர் பெயரில் ‘அம்பேத்கர் சுடர்’ என்னும் விருது 2007 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வருகிற 30 ஆம் தேதி சென்னை கலை வாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா, எழுத்தாளர் எஸ்.வி.ராஜ துரை, வி.ஜி. சந்தோசம், செல்லப்பன், தெகலான் பாகவி, கா.ராசன், மறைந்த எழுத்தாளர் ஜவகர் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.