வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு
தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் தள்ளிவைக்கப்பட் டுள்ளது. அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 30 மற்றும் 31 தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் வெள்ளியன்று (ஜன. 27) மும்பையில் சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில், கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள் ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனினும் 31ஆம் தேதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு: காலஅவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை
சென்னை, ஜன. 28- தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருந்தது. ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த நவம்பர் 15ஆம் தேதி துவங்கப்பட்டு, டிசம்பர் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் இது வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் ஏறக்குறைய இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் பொங்கல் தொடர் விடுமுறை, குடியரசு தினம் விடுமுறை என வந்த தால் ஆதாருடன் மின் இணைப்பை சேர்ப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடை விலகியதால் குட்கா விற்பனை
சென்னை, ஜன. 28- தமிழகத்தில் குட்கா, பான் மசாலா விற்பனைக்கு கடந்த 10 ஆண்டுகளாக தடை இருந்து வந்தது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தர வின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள நீதி மன்றம், அது தொடர்பான வழக்குகளை யும் ரத்து செய்து சமீபத்தில் உத்தர விட்டது. இதனால் தற்போது காவல் துறையினரும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் சென்னை உட்பட தமிழகம் முழு வதும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வந்த நபர்கள் தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது என்ப தால் பயமின்றி விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் அடுத்தகட்டமாக மேல் முறை யீடு செய்து, அதில் என்ன மாதிரியான தீர்வு வெளியாகிறதோ அதை பொறுத்தே காவல் துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் நடவடிக்கை அமையும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு பிப். 3ஆம் தேதி தொடக்கம்
சென்னை, ஜன. 28- ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு எழுதுவ தற்கு விண்ணப்பித்த 30 நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட வில்லை என அறிவிக்கப்பட்டுள் ளது. அவற்றில் பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 9 பேரும், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் நடைபெற்ற தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேரும், விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் புகைப்படம் ஒட்டா மலும், கையொப்பம் போடா மல் இருப்பது போன்றவற்றிற்கு 21 தேர்வர்கள் நிராகரிக்கப்பட் டுள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தியில், பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள் 2க்கான உரிய தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத் தப்பட உள்ளது. கணினி வழித் தேர்விற்காக பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர் கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 பிப்ரவரி 3ஆம்தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்விற்கான கால அட்ட வணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. மேலும் தேர்விற்கு 3 நாட்களுக்கு முன்பு அவர்களுக் கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. எந்த தேர்வு மையம் என்பது 3 நாட்களுக்கு முன்னதாக வெளி யிடப்படும். ஹால் டிக்கெட்டில் தேர்வு மையங்களை மாற்ற வேண்டுமென கூறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மீண்டது தமிழ்நாடு; ஒன்றிய அரசின் இணையத்தில் எழுத்துப்பிழை திருத்தம்
சென்னை, ஜன. 28- ஒன்றிய அரசின் இணைய பக்கத்தில் தமிழ்நாயுடு என்று குறிப்பிடப்பட்டிருந்த எழுத்துப் பிழையானது தற்போது தமிழ்நாடு என்று திருத்தப்பட்டுள்ளது. நாட்டின் 74ஆவது சுதந்திரம் தினம் கடந்த 26ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தில்லி கடமை பாதையில் குடியரசு தலை வர் திரௌபதி முர்மு தேசிய கொடி யேற்றி வைத்து மரியாதை செலுத்தி னார். இந்த விழாவில் எகிப்து அதிபர் அல்சிசிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் நடைபெற்ற முப்படை அணிவகுப்பை பார்வையிட்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அந்த மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அசாம், அருணாசலப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும், ஜம்மு காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஊர்திகளும் பங்கேற்றன. இந்நிலையில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற மாநிலங்க ளின் அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை தேர்ந்தெடுப்ப தற்கான ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.ஒன்றிய அரசின் இணைய பக்கத்தில் 17 மாநிலங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அதில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக ‘தமிழ்நாயுடு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது எழுத்துப்பிழை சரிசெய்யப்பட்டு தமிழ்நாடு என திருத்தப்பட்டுள்ளது. அதேபோல் கேரள மாநிலத்தின் பெயரும் ஆங்கிலத்தில் கேரிலா என்று தவறாக எழுதப்பட்டிருந்தது. தற்போது அந்த பெயரும் திருத்தப் பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு அமெரிக்க நன்கொடை
வாஷிங்டன், ஜன.28- இஸ்ரேலிய தீவிரவாத கும்பலுக்கு வரிவிலக்குடன் கூடிய நன்கொடை அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்டி ருப்பது தெரிய வந்துள்ளது. ஸ்லோம் அசிரைச் என்ற அமைப்பு பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான மேற்குக் கரைப்பகுதியில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கொண்டதாகும். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துபவர்கள் இந்த அமைப்பில் இடம் பெற்றிருக்கிறார்கள். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு தெரிவிக்க உலகின் பல பகுதிகளில் இருந்து நன்கொடையை வசூலிக்கும் பணியையும் 2018 ஆம் ஆண்டில் இருந்து அவர்கள் மேற்கொள்கிறார்கள். அமெரிக்காவில் இருந்துதான் இந்தத் தீவிரவாத அமைப்புக்கு அதிகமான அளவில் நிதி வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு ஆண்டும் 200 கோடி அமெரிக்க டாலர் நிதி கிடைத்திருக்கிறது. ஜேடகா என்ற நிதி திரட்டித்தரும் அமைப்பின் மூலமாகவே பெரும்பாலான நிதி திரட்டப் பட்டுள்ளது. இந்த நிதி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு செல வழிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில் பாலஸ்தீனக் குழந்தை ஒன்றையும், அதன் பெற்றோர்களையும் கொலை செய்து தற்போது சிறையில் இருக்கும் அமிராம் பென் உலிலெல் இந்த அமைப்புடன் தொடர்பு கொண்டிருக்கிறார். அவருக்கு இந்தப் பணம் சென்றிருக்கிறது. அசோசியேட்டட் பிரஸ் மற்றும் இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பு ஆகிய இரண்டும் இந்த நன் கொடைகள் குறித்து மேற்கொண்ட புலனாய்வில் இந்த விபரங்கள் கிடைத்திருக்கின்றன. அமெரிக்க வருவாய்த்துறை யிடம் தொடர்பு கொண்டபோது, இது குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்கள்.