states

img

கல்லீரல் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்!

சென்னை, ஜூன் 30- சென்னை இந்திய மருத்துவத்தின் தலைநகரம் என்று மருத்துவத்துறை யினரால் அழைக்கப்படுகிறது. அந்தள வுக்கு மருத்துவச் சிகிச்சை பெற பல  நாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களி லிருந்தும் தமிழகத்திற்கு ஏராளமா னோர் வருகை தருகிறார்கள். நாள்தோறும் நூற்றுக்கணக்கான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும்  இந்த மருத்துவமனைகளில் செய்யப் படுகின்றன.  அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை ஸ்டான்லி மருத்துவ மனையில் பெரியவர்களுக்கு மட்டும்  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கச் சென்னையில் அரசு சார்பில் இருப்பது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மட்டுமே. இங்கும் நாள்தோறும் ஏராள மான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுக் காப்பாற்றப்படுகின்றனர். இருப்பினும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்படும் குழந்தைகளுக்குச் சென்னையில் உள்ள ரேலா, காவேரி, எம்ஜிஎம் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இதற்காகக் கட்டணம் ரூ.30 லட்சத் திற்கும் மேல் ஆகும். முதலமைச்சர்  காப்பீட்டுத்திட்டத்தில் செய்யப்படும் போது அறுவைசிகிச்சையும் சிகிச்சை முடிந்த பின்னர் 2 ஆண்டுகளுக்கு மாதந் தோறும் ரூ.15ஆயிரம் மதிப்புள்ள இலவசமாக மருந்துகளும் வழங்கப்படு கின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்நாள் முழுவதும் ஆகும்  மருந்துச் செலவை நோயாளியின் குடும்பம்தான் எதிர்கொள்ளவேண்டும். பொதுவாக உறுப்பு மாற்று அறுவை  சிகிச்சைக்கு முன்னர் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் உறுப்பு தானம் செய்ய  முன்வரும் நபரைப் பரிசோதிக்கவும் அறுவை சிகிச்சைக்குக் குழந்தை யைத் தயார் செய்யவும் மற்ற உறுப்பு கள் பாதிக்கப்படாமல் தடுக்கவும் பல் வேறு வகையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் செய்யப்படு கின்றன. அதற்குக் குறைந்தபட்சம் ரூ.5  லட்சம் முதல் ரூ.8லட்சம் தேவைப்படு கிறது.  வசதிபடைத்தவர்களால்தான் இவ்வளவு பெரிய தொகையைச் சமாளிக்கமுடியும். நடுத்தர மக்கள் பலர் நகைகளை விற்றும் நிலம், வீட்டை விற்றும் அடமானம் வைத்தும் தொகை யைத் திரட்டி குழந்தையைக் காப்பாற்ற  வேண்டியுள்ளது.  பணம் இல்லாத ஏழை, எளிய  மக்கள் தங்கள் கண் முன்னே குழந்தையின் உயிர் பறிபோவதைக் காணவேண்டிய கொடுமையும் இந்த மருத்துவ தலைநகரில் தான் நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வை குண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூ ரில் விவசாயம் செய்து வரும் வைகுண் டம்- மாடத்தி இளம் தம்பதியரின் மகள் மாறன் சோஹித். பிறந்து ஒன்றரை வய தாகிறது.  இக்குழந்தைக்கு திடீரென கடந்த 8ஆம் தேதி  உடல்நிலை பாதிக்கப் பட்டது. மஞ்சள் காமாலை தாக்கியுள்ள தால் குழந்தையின்   கல்லீரல் கடுமை யாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அத னால் தான் வயிறு வீங்கி காணப்படுவ தாகக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.  சிகிச்சை அளித்தாலும் குழந்தையைக் காப்பா ற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டதால் வேறு வழியின்றி திருநெல்வேலியில் உள்ள கிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் 17ஆம் தேதி அந்த குழந்தையைப் பெற்றோர் சேர்த்தனர். அங்குக் குழந்தை யைப் பரிசோதித்த மருத்துவர்கள் கல் லீரல் பாதிப்பை  உறுதிப்படுத்தினர். தொடர்ந்து கல்லீரல்  மேலும் சேதமாகா மல் தடுக்க சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்று கூறினர். அதற்கான வசதி சென்னையில்தான்  உள்ளது என்று கூறியதால் குரோம் பேட்டையில் உள்ள ரேலா தனியார் மருத்துவமனையில் குழந்தையைச்  சேர்த்தனர். முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று கூறிய மருத்துவமனை ஊழியர்கள் அறுவை சிகிச்சைக்கு மட்டும் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும் என்றும் அறுவை சிகிச்சைக்கு முன் குழந்தைக்கு அளிக்கப் படும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மருந்து மாத்திரைகள் அறை வாடகை கட்டணம் மற்றும் உறுப்பு தானம் அளிக்க உள்ள நபருக்குச் செய்யப்பட வுள்ள பரிசோதனை உள்ளிட்ட வற்றுக்கு ரூ.4 லட்சம் தேவைப்படும்; அதைச் செலுத்தினால் தான் அடுத்த  கட்ட நகர்வுகளை மேற்கொள்ள முடியும் என்று கட்டாயமாகத் தெரி வித்துவிட்டனர்.

மல்லிகைப்பூ சாகுபடி செய்யும்  நடுத்தர விவசாயியான வைகுண்டத்தி டம் இவ்வளவு பணம் இல்லை. ஏற் கனவே கிருஷ்ணா  மருத்துவமனை யில் ரூ.4லட்சம் வரை செலவழித்துவிட்ட னர். இதனால் ரேலா மருத்துவமனை யிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து கனத்த  இதயத்துடன் சென்னை எழும்பூரில்  உள்ள குழந்தைகள் நல மருத்துவ மனையில் கடந்த சனிக்கிழமை இரவு அந்த குழந்தையைச் சேர்த்தனர். அரசு  மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதித்தபோது உடல் நிலை மோசமாக உள்ளதால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை   ஒன்றே வழி என்று அவர்களும் கூறினர். தற்போது அதற்கான சிகிச்சை நடைபெற்று வருகிறது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் இதற்கான வசதி இல்லாத நிலை உள்ளது. முத லமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத் தின் கீழ்  தனியார் மருத்துவமனையில் இத்தகைய  சிகிச்சைகளை  மேற்கொள் ளும்போது மருத்துவமனையில் சேர்க்க ப்பட்ட நாள் முதல் டிஸ்சார்ஜ்    செய்யப் படும் வரை ஆகும் செலவை   ஈடுகட்டுவ தாக அந்த காப்பீடு  இருக்கவேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்.

- அ.விஜயகுமார்

;