கேரள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
கேரள மாநிலத்தின் பல பகுதி களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இந்த கனமழைக்கு ஆலப் புழா மாவட்டத்தில் 2 பேர் பலியாகியுள்ள னர். இந்நிலையில், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்ச ரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். ஆரஞ்சு எச்சரிக்கை என் பது 6 செமீ முதல் 20 செமீ வரை கன மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சத்தான, ஆரோக்கியமான உணவு கிடைக்காதவர்கள் 74 சதவீதம்
பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. நாட்டில் விலைவாசி உயர்வு, வறுமை, வேலைவாய்ப்பின்மை, விவசாய விளை பொருட் களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது போன்ற பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. மோடி ஆட்சியில் கார்ப்பரேட்களே செழித்து வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயி கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து செப்.7 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, (FAO), சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியம் (IFAD), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF), உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WFP) ஆகியவை இணைந்து நகரமயமாக்கல்,
வேளாண் உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கிராமங்கள்-நகரங் களில் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்தல் என்ற கருப்பொருளில் தயாரித் துள்ள வருடாந்திர அறிக்கையை (“உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை”) வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கை மூன்று முக்கிய நோக்கங் களைக் கொண்டுள்ளது. 1.பசியை முடிவுக்குக் கொண்டுவருதல், 2.உணவுப் பாதுகாப்பில் தன்னிறைவு அடைதல், 3.ஊட்டச்சத்தை மேம்படுத்துதல். இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 2023- ஆம் ஆண்டில் 74 சதவீதம் பேர் ஆரோக்கியமான உணவை வாங்கிச் சாப்பிடமுடியாத நிலையில் உள்ளனர். பிற நாடுகளோடு ஒப்பிட்டால் ஆரோக்கி யமான உணவு கிடைக்காதவர்கள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கணிசமான பகுதியினர் போதுமான வருமான மின்மை, வறுமையால் உழல்வதால் அவர் களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்க வில்லை. ஒரு சாதாரண தொழிலாளியின் மாத வரு வாயில் 2018-இல் 22.5 சதவீதமாக இருந்த உணவுச் செலவு 2023-இல் 27.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. மாதச் சம்பளம் பெறுபவர்களின் உணவுச் செலவு 9.9 சதவீதத்திலிருந்து 12.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.