states

மோட்டார் தொழிலாளிகள் மத்தியில் கொந்தளிப்பு தமிழகத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது

சென்னை, ஜூன் 22- ஆட்டோ உள்ளிட்ட மோட்டார் தொழிலாளிகள் மத்தியில் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதால், தமிழகத்தில் புதிய மோட்டார் வாகனச்சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சம்மேளனப் பொதுச் செயலாளர் எம். சிவாஜி வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: ஒன்றிய அரசாங்கம் கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட் டத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் மோட்டார் வாகன சட்ட திருத்தம் அமலாக்கம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையானது ஆட்டோ தொழிலாளிகள் உள்ளிட்ட மோட்டார் தொழிலாளிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த காலத்தில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை எதிர்த்த  திராவிட முன்னேற்றக் கழக அர சாங்கம் தற்போது ஆட்சியில் இருக்  கிறபோது, இந்த சட்டம் அமலாக்கு வது குறித்த அறிவிப்பை வெளி யிட்டுள்ளது என்பது ஆட்டோ உள் ளிட்ட மோட்டார் தொழிலாளிகள் மத்தியில் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கி இருக்கிறது. மோட்டார் தொழிலாளர்களின் வருமானத்தில் பெரும் பகுதியை அபராதமாகவே, பறிக்கிற முறை யில் அபராத முறை தீர்மானிக்கப் பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் என்பது ஒரு மோட்டார் தொழிலாளியின் ஒரு மாத வருமானம் என்பதை அதி காரிகள் உணர்ந்திருக்க வாய்ப் பில்லை. ஆயிரம் ரூபாய் என்பது ஒரு  ஆட்டோ தொழிலாளிக்கு இரண்டு அல்லது மூன்று நாள் வருமானம் என்பதை பார்க்க வேண்டும்.

இப்படி மூன்று நாள் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஒரே நாளில் அபராதமாக செலுத்தி விட்டால் அந்த குடும்பம் வாழ வழி இல்லா மல் தற்கொலைக்குச் செல்வதை தவிர வேறு வழி என்ன இருக்கிறது என்பதை அதிகாரிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் . தமிழகத்தில் விதி மீறும் மோட்டார் தொழிலாளிகளுக்கு ஏற்க னவே அபராதம் தீர்மானிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் சென்னை நகரத்தில்  விஞ்ஞானத்திற்கு புறம்பாக வேக  கட்டுப்பாடு என்பது தீர்மானிக் கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தானியங்கி வேகக் கட்டுப்பாட்டு கருவி மூலம் கண்காணித்து அப ராதம் விதிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அபராதம் தானாகவே தானி யங்கி கேமராக்கள் மூலம் விதிக் கப்படும் என்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும்  ஏற்கனவே வருமானமின்றி அல்லல்படும் ஆட்டோ உள்ளிட்ட மோட்டார் தொழிலாளிகளை பாது காக்க, அவர்களின் வருமானத்தை பெருக்க தமிழக அரசாங்கம் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசாங்கம் கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அபராதங்கள், வேகக்கட் டுப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் தமிழகத் திற்கு பொருந்தாது. சாலை வசதிகள், மோட்டார் தொழிலாளிகளுக்கான வருமானம் அதிகரிப்பு ஆகியவற்றுக்கான கட்ட மைப்பை தமிழகத்தில் உருவாக்கிட நடவடிக்கைகளை யோசிக்கலாம்.  புதிய மோட்டார் வாகனச்சட் டத்தை அமல்படுத்தினால் மிகப் பெரிய சமூகப் பதற்றத்தை உரு வாக்கும் என்பதை தமிழக அர சாங்கம் உணர்ந்து இச்சட்டத்தை தமி ழகத்தில் அமல்படுத்தாமல் தடுத்து நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.