states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. 11 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஊழியர்களை பணி  நீக்கம் செய்வதாக பேஸ் புக்கின் தாய் நிறுவன மான மெட்டா அறி வித்துள்ளது. இந்த ஆட் குறைப்பு மொத்த ஊழி யர்களில் 13% ஆகும்.
  2. சட்டமன்றத் தேர்தலுக் காக 67 கம்பெனி மத்திய ஆயுதப்போலீஸ் படைகள், 15 சிஆர்பிஎப் பிரிவுகள் என மொத்தம் 6,700 பாதுகாப்பு படை  வீரர்கள் குழு இமாச்சலப் பிரதேசம் செல்கின்றனர். 
  3. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதால் வரும்  நவம்பர் 11 மற்றும் 12-ஆம் தேதி பெரும்பாலான மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படு வதாக சென்னை வானி லை ஆய்வு மையம் அறி வித்துள்ளது.  
  4. சென்னை விமானநிலை யத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.33 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். 3 கிலோ தங்கத்தை கம்பி வயர் போல மாற்றி சூட் கேஸில் வைத்து தைத்து  கடத்தி வந்த 2 இளைஞர் களை கைது செய்தனர்  சுங்கத்துறை அதிகாரிகள்.
  5. 2022 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரையில்  6 ஆயிரம் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்திருக்கிறது. இவர்களில் 18 வயது நிரம்பாதவர்கள்  739 பேர் மற்றும் பெண்கள் 141 பேராக இருந்திருக்கிறார்கள். ஜெருசலேம் நகரில் இருந்து மட்டும் 2 ஆயிரத்து 700 பேரைக் கைது செய்துள்ளனர். சிறைக்கைதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் கடுமையான தொல்லைகளுக்கு ஆளான ஆண்டாக 2022 இருக்கும் என்று பாலஸ்தீன சிறைக்கைதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
  6. பள்ளிக்கூடங்கள் திறந்து ஏழு மாதங்களாகியும் நேபாளத்தில் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. மாணவர்களின் கல்வி இலக்குகளுக்கும், அவர்களின் கற்றலுக்குமான இடைவெளி அதிகமாகியுள்ளதற்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாதது ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. “பாதிக்கும் மேற்பட்ட பாடங்களை நடத்தி முடித்து விட்டார்கள். ஆனால் புத்தகங்கள் இல்லாததால் படிக்க இயலவில்லை” என்று மாணவர்களில் ஒருவர் குறிப்பிடுகிறார்.
  7. மின் கட்டண உயர்வு கடுமையாக எகிறியுள்ள நிலையில் இப்போதிருந்தே மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் வேலையில் ஸ்வீடன் மக்கள் இறங்கியிருக்கிறார்கள். மின்விளக்குகளை அணைத்து வைப்பது அவசியம் என்று ஆலோசனைகள் தருகின்றனர். குளிர்காலம் வருவதால் இரவு நேரம் நீட்டிக்கும். அதை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியுள்ளது என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.