states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ராஜஸ்தானிலுள்ள பிரம்மா கோவிலில் மோடி வழிபாடு

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பாஜக அரசின் 9-ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டா டப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக புதனன்று ராஜஸ்தான் சென்ற பிரதமர் மோடி, அம்மாநிலத்தில் உள்ள பிரம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் கருவறையில் உள்ள பிரம்மா சிலை முன்பு பிரதமர் மோடி ஆரத்தி காண்பித்து வழிபட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு அர்ச்சகர் பிரசாதம் வழங்கினார்.

மணிப்பூரில் குக்கி பழங்குடியினருடன் அமித்ஷா பேச்சு

மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் தொடரும் நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர்  அமித்ஷா செவ்வாயன்று மணிப்பூர் சென்றார். அங்கு வன்முறையை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு படையினர் மற்றும் மூத்த அதி காரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், புதனன்று குக்கி பழங்குடியின சமூகத்தினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மணிப்பூரின் மொரிஹ் நகரில் நடந்த இந்த சந்திப்பின் போது, குக்கி பழங்குடியினரின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், மோதல் போக்கை கைவிட்டு அனைவரும் அமைதி வழிக்கு திரும்ப வேண்டும் என்றும் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.

காஷ்மீரில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

இந்தியாவில், பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஜ்புல் முஜாகிதீன், அல்-பாதர் மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்டு உள்ளன. எனினும், இந்த அமைப்புகளில் இருந்து புதிதாக உருவான கிளைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளில் பலர் செயல்பட்டு வருவதாக கூறி,  காஷ்மீரில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதனன்று சோதனை நடத்தினர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்கிறது?

எரிவாயு நிறுவனங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 19 கிலோ வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்தன. இருப்பினும், மார்ச் மாதத்துக்குப் பிறகு, 14 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மார்ச் 2023-இல், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு  மாதத்தின் தொடக்கத்திலும், எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்கும் என்பதால்,  ஜூன் 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கமாண்டோக்கள் இல்லாவிட்டால் சந்திரபாபு கதை முடிந்துவிடும்!’

“சந்திரபாபு நாயுடுவை சுற்றி கமாண்டோக்கள் உள்ளனர். அவர்களை நீக்கிவிட்டால் அவ ரது வேலை முடிந்துவிடும். யாரை மீட்பதற்காக சந்திரபாபு தன்னுடன் பாதுகாவலர்களை வைத்துள்ளார்? அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.  அவர் எப்படி இசட் பிளஸ் பாதுகாப்புக்கு தகுதியானார்? நாட்டில் எத்தனையோ பேர் அச்சுறுத்த லுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியுமா? இந்த சரியான முறை அல்ல. சந்திரபாபுவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது தேவையில்லாதது” என்று ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் கூறியுள்ளார்.

‘பொது வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் மாற்றம் உறுதி’

“ப. சிதம்பரம் கூறுவது உண்மைதான். பாஜகவுக்கு எதிராக சுமார் 450 இடங்களில் பொது வான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், நாட்டின் அரசியலில் ஒட்டுமொத்த தீர்ப்பும் மாறி விடும். ஜூன் 12 அன்று பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் பாஜக அல்லாத கட்சிகளின் கூட்டத்தில் தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத் பவாருடன், எங்கள் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொள்வார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக பொதுவான வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஜூன் 12 கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்” என்று  சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

‘சச்சின் பைலட்டுடன் விரைவில் இணைந்து பணியாற்றுவேன்’

“நானும், சச்சின் பைலட்டும் விரைவில் இணைந்து பணியாற்றுவோம் என நம்பிக்கை  பிறந்துள்ளது. தலைமை அறிவுறுத்தலின்பேரில் அவரவருக்கு வழங்கப்படும் பொறுப்பு களில் நாங்கள் பணியாற்றுவோம். பதவிகளும், அங்கீகாரமும் எனக்கு முக்கியமில்லை. 3 முறை  முதல்வராகவும், பலமுறை ஒன்றிய அமைச்சராகவும் இருந்துள்ளேன். எனவே, எந்த பொறுப்பி லும் பேரவைத்தேர்தல் வெற்றிக்காக தலைமை கூறும் கடமைகளை செய்து முடிப்பேன். கடந்த 5 ஆண்டுகளாக என்னால் இயன்றவரை நன்றாக ஆட்சி செய்து வருகிறேன். விவசாயிகள், இளை ஞர்கள், தொழிலாளர்கள், பல்வேறு சமூக மக்கள், சிறுபான்மையினர் உள்பட அனைத்து தரப்பு  மக்களின் சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

இன்று முதல் மீன்பிடிக்க செல்வோம்:  மீனவர்கள் அறிவிப்பு

சென்னை, மே 31- தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 ஆம் தேதி  முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது.  எனவே விசைப்படகுகளில் மீனவர்கள்  மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூன் 1  முதல்  கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாக சென்னை மீன்பிடி துறைமுக விசைப் படகு சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறிய தாவது:- விசைப்படகு உரிமையாளர் களின் வாழ்வாதாரம் கருதி வியா ழனன்று முதல் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல உள்ளோம். அரசால் தடை செய்யப் பட்ட கசார் இன மீன்களை பிடிக்க  அனுமதி கிடையாது. இதை மீறும்  விசைப்படகுகள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ள னர்.

பல் மருத்துவ கல்லூரிக்கு  50 இடங்கள் அனுமதி

சென்னை, மே 31- கடந்த அதிமுக ஆட்சியில் புதுக் கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கட்டு மான பணிகள் தொடர்ந்து நடை பெற்றன. இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த  கல்லூரியில் நடப்பாண்டில் 50 பி.டி.எஸ். இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி கோரி இந்திய பல் மருத்துவ கவுன் சிலிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்து இருந்தது. கடந்த மாதம் கவுன்சில் அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.  இந்தநிலையில் புதுக்கோட்டை அரசு பல் மருத்துவ கல்லூரியில் நடப்பு  ஆண்டில் 50 பி.டி.எஸ். இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த பல் மருத் துவ கவுன்சில் அனுமதி அளித்துள் ளது.

சிறுமியை கடத்தி திருமணம்: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி, மே 31- கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு  கிராமத்தை சேர்ந்தவர், 16 வயது சிறுமி.  இவரை மோரமடுகு அடுத்த கோவில் கொட்டாயை சேர்ந்த வேடியப்பன் (28) என்பவர் ஆசை வார்த்தை கூறி  பழகியுள்ளார். அவரிடம் நாம் திரும ணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில் வேடியப்பன் தன் நண்பர் குணசேகர் (29) என்பவருடன் சேர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார்.  இது குறித்து சிறுமியின் பெற்றோர்  கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்  புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வேடியப்பன், குணசேகர் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து  வந்த நிலையில் நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார்.  அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வேடியப்பன் அவருக்கு துணையாக இருந்த குணசேகர் இருவருக்கும் சிறு மியை கடத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள், போக்சோ சட்டத்தில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் இருவருக்கும் தலா, 4 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதித்தார். மேலும் தண்ட னைகளை ஏக காலத்தில் அனுப விக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தர விட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.




 

;