states

633 திட்டப்பணிகளை கிடப்பில் போட்டுள்ள மோடி

புதுதில்லி, ஜன.29- பிரதமர் மோடியின் எட்டாண்டுகால ஆட்சி யில் தமிழ்நாட்டின் சேது சமுத்திரத்திட்டம், எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் மட்டுமல்ல சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே, பெட்ரோலியம் ஆகிய துறைகளின் திட்டப் பணிகள் நூற்றுக்கணக்கில் பரணில் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மன் கி  பாத் உரையைப் பார்த்தால் இவர் மட்டுமே செயல்படுவது போலவும் தாம் தான் வளர்ச்சி யின் நாயகன் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். மோடி அரசின் செயல்பாடுகள் மிக மிக  மோசமாக உள்ளன என்பதையே கிடப்பில்  கிடக்கும் பின்வரும் பணிகள் உறுதிப்படுத்து கின்றன.  சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறையில் 724 திட்டங்களில் 428 திட்டங்கள், ரயில்வேயில், 173 திட்டங்களில், 117 திட்டங்கள், பெட்ரோலியத் துறையில், 158  திட்டங்களில் 88 திட்டப்பணிகள் மிகவும் தாமத மாகி உள்ளன என்கிறது 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த ஃபிளாஷ் அறிக்கை:  முனீராபாத் - மகபூப்நகர் ரயில் திட்டம் கிட்டத்  தட்ட 276 மாதங்கள் அதாவது 23 ஆண்டுகள் தாமதமாகியுள்ளது.

 உதம்பூர்-ஸ்ரீநகர்-பார முல்லா ரயில் திட்டம் 247 மாதங்கள் தாமதமா கிறது. பேலாப்பூர்-சீவுட்-நகர்ப்புற மின்மய மாக்கப்பட்ட இரட்டைப் பாதை 228 மாதங்கள் தாமதமாகிறது. மொத்தத் திட்டப்பணிகளில் 47 பணிகள் மெகா திட்டங்கள். கிட்டத்தட்ட ரூ1,000 கோடிக்கும் மேல் செலவாகும். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சா லைத் துறையில் 724 திட்டங்களைச் செயல்  படுத்துவதற்கான மொத்தச் செலவு ரூ.3,82, 180.34 கோடியாகும் தாமதத்தால் இது ரூ.4,02, 958.36 கோடியாக (5.4 சதவீதம் அதிகரிப்பு). மோடி அரசின் இந்த திட்டங்களுக்கு 2022  டிசம்பர் வரை செய்யப்பட்ட செலவு ரூ.2,35, 925.26 கோடி ஆகும், இது எதிர்பார்க்கப்பட்ட செலவில் 58.5 சதவீதம் ஆகும்.  ரயில்வேயில், 173 திட்டங்களை செயல்  படுத்துவதற்கான மொத்தச் செலவு ரூ.3,72, 761.45 கோடியாக இருந்தது. பின்னர் இது ரூ.6,25,491.15 கோடியாக மாற்றப்பட்டது. இது 67.8 சதவீதம் அதிகமாகும். இந்தத் திட்டங்களுக்கு 2022 டிசம்பர் வரை  செய்யப்பட்ட செலவு ரூ.3,65,079.88 கோடி.  எதிர்பார்க்கப்பட்ட செலவில் இது 58.4 சதவீதம் ஆகும். பெட்ரோலியத் துறையில் 158 திட்டங்க ளைச் செயல்படுத்துவதற்கான மொத்தச்  செலவு ரூ.3,82,097.19 கோடியாக இருந்தது. இது பின்னர் ரூ.4,02,446.01 கோடியாக அதிக ரிக்கப்பட்டது, இது 5.3 சதவீதம் அதிகமாகும்.  இந்தத் திட்டங்களுக்கு டிசம்பர் 2022 வரை செய்யப்பட்ட செலவு ரூ.1,54,240.87 கோடி. எதிர்பார்க்கப்பட்ட செலவில் 38.3 சதவீதம் ஆகும்.

;