states

மோடி ஆட்சியில் காணாமல் போன சிறுமிகள்-பெண்கள் 13.13 லட்சம் பேர்

புதுதில்லி, ஜூலை 30- 2019-ஆம் ஆண்டு முதல் 2021 வரை 13.13 லட்சம் சிறுமிகள், பெண்கள் காணாமல் போயுள்ளனர் என ஒன்றிய அரசு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்காக பல முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் மோடி அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 10,61,648 பேரும், அதற்கும் குறைவான வயதுடைய 2,51,430 பெண்களும் காணவில்லை. தலைநகர் தில்லியில், 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 61,054 பெண்கள் 22,919 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் 8,617 பெண்கள் 1,148 சிறுமிகளைக் காணவில்லை. மத்தியப் பிரதேசத்தில் 2019 முதல் 2021 வரை 1,60,180 பெண்கள், 38,234 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். இதே காலகட்டத்தில் மேற்கு வங்கத்திலிருந்து 1,56,905 பெண்கள் 36,606 சிறுமிகள், மகாராஷ்டிராவில் 1,78,400 பெண்கள், 13,033 சிறுமிகள்  காணாமல் போயுள்ளனர். ஒடிசாவில், மூன்று ஆண்டுகளில் 70,222 பெண்கள் 16,649 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். யூனியன் பிரதேசங்களில், காணாமல் போன  பெண்களின் எண்ணிக்கையில் தில்லி முதலிடத்தில் உள்ளது.