சென்னை,நவ.30- சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியிடம் அமலாக் கத்துறை விசாரணை நடத்தியது. செம்மண் குவாரி வழக்கு தொடர்பாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதியப்பட்ட புதிய வழக்கு விசார ணைக்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, நவ.30-ஆம் தேதி மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி யிருந்த நிலையில், அவர் வியாழனன்று காலை அம லாக்கத்துறை அலுவல கத்தில் விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் பொன் முடியிடம் விசாரணை நீடித்தது. அமைச்சர் க.பொன்முடி, கடந்த 2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், கூடுதல் பொறுப்பாக கனிமவளத் துறையையும் கவனித்தார். அப்போது அவர், விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பூத்துறையில் அமைக்கப்பட்ட செம்மண் குவாரி உள்பட 5 செம்மண் குவாரிகள் தனது மகன், உறவினர்கள் பெயரில் கொடுத்ததாக கூறப்பட்டது. அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் கே.எஸ்.ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்பு ரம் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரி மாற்ற தடை சட்டத்தின் கீழ் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்த அமலாக்கத்துறை, பொன்முடிக்குச் சொந்த மான 7 இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை செய்தது. இது தொடர்பாக அவரிடம் 2 நாட்கள் விசாரணை செய்தது. பிறகு, அமலாக்கத் துறை கடந்த ஆக.23 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்கக் குற்றப்பத்திரிக் கையை தாக்கல் செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு அமலாக்கத்துறை அலுவ லகத்தில் நவ.30 ஆம் தேதி மீண்டும் ஆஜராகும்படி அமைச்சர் பொன்முடிக்கு அழைப்பாணை அமலாக் கத்துறை அனுப்பியிருந்தது.