தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், பெருங்குளம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதங்களையும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட ஏரல் மேம்பாலம் பகுதியினையும் பார்வையிட்டார். அவருடன் சிபிஎம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் பி.பூமயில், திருவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் நம்பி ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.