states

2வது நாளாக கைதிகளை பரிமாறிக் கொண்ட இஸ்ரேல் - ஹமாஸ்

காசா/டெல் அவிவ், நவ. 26- இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தின் இரண்டாம் நாளன்று இஸ்ரேலைச் சேர்ந்த 13 பணயக் கைதிகளையும் தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேரையும்  சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் குழுவினர் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து இஸ்ரேலும் சிறையில் அடைத்து வைத்திருந்த  39 பாலஸ்தீனர்களை  விடுவித்தது.  காசா பகுதிக்குள் அதிக வாகனங்களில் உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட ஏழு மணி நேரங்களுக்கு ஹமாஸ் குழுவினர் பணயக்கைதிகளை தாமதப்படுத்தி விடுவித்தனர்.  இதனை தொடர்ந்து மூன்றாவது நாளில் வெளியிடப்போகும் பணயக் கைதிகளின் பட்டியலையும் ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.