டெல் அவிவ், நவ.4- காசாவில் அல்-பகூரா என்ற பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்திய தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 54 பேர் காயமடைந்ததாகவும் தக வல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி, காசாவில் உள்ள பள்ளிகள், தங்குமிடங்கள், மருத்துவம னைப் பகுதிகள் மற்றும் ஆம்பு லன்ஸ்களை குறிவைத்து இஸ் ரேல் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இத னால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கையில் சரிபாதிக்கும் அதிகமாக குழந் தைகள், பெண்களே உள்ளனர். காசா நகரில் வெள்ளிக் கிழமை ஆம்புலன்ஸ் வாகனத் தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக் குதலில் குறைந்தது 15 பேர் கொல் லப்பட்டதாக சுகாதார அதிகாரி கள் தெரிவித்தனர். இந்நிலையில், இஸ்ரேல் ராணு வம் அல்-பகூரா (al-Fakhoora School) என்ற பள்ளிக்கூடம் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்திய தில் 15 பேர் கொல்லப்பட்டதாக வும், 54 பேர் காயமடைந்ததாக வும் தகவல்கள் வெளியாகியுள் ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்கு தலில் குறைந்தது 231 பேர் உயிரி ழந்திருக்கின்றனர் என்று காசா வின் செய்தித் தொடர்பாளர் அஷ் ரப் அல்-குத்ரா செய்தியாளர்களி டம் தெரிவித்துள்ளார். “அக்டோபர் 7 முதல் 150 துணை மருத்துவர்கள் (para medics) கொல்லப்பட்டுள்ளனர். 27 ஆம்புலன்ஸ் வாகனங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள் ளன. பலியானவர்களில் பெரும் பாலானவர்கள் பள்ளிக்கூடத்தில் அமர்ந்திருந்த பெண்கள், குழந் தைகள் எனத் தெரிகிறது. அவர் களின் எலும்புகள் மற்றும் சதை கள் பிளாஸ்டிக் பைகளில் சேக ரிக்கப்பட்டன” என்றும் அவர் வேத னையை பகிர்ந்து கொண்டுள்ளார்.