வல்லரசுகளை ஆளும் உலகத் தலைவர்கள் கூட பார்த்து வியக்கும் தலைவர் மோடி! ஒரு சிறு துரும்பு அளவு கூட தவறு செய்யாத வர் மோடி! பரிசுத்தமானவர் மோடி. - இவையெல்லாம் அண்ணாமலை அல்லது தமிழிசை கூறியது அல்ல! அய்யா மருத்துவர் ராமதாசு அவர்கள் கூறுவது! அய்யா மருத்துவர் அவர்களே பாஜக ஆட்சிக்கு பூஜ்யத்துக்கும் கீழேதான் மதிப்பெண் என்று சொன்னீர்களே! அதே வாய்தான் இதுவா? அல்லது இது வேறு வாயா? மோடி, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மவுனம் காக்கிறாரே! அது தவறு இல்லையா? தேர்தல் பத்திரங்கள் ஊழல் தவறு இல்லையா? இந்தி திணிப்பும் தமிழை புறக்கணித்துவிட்டு சமஸ்கிருதத்துக்கு கூடுதல் நிதியும் தவறு இல்லையா? அதானியின் அதீத வளர்ச்சிக்காக சட்டங்களை வளைத்து அனைத்தையும் செய்தாரே! தவறு இல்லையா? மணிப்பூர் எரிந்த பொழுது நீரோ போல பிடில் வசித்தாரே! அது தவறு இல்லையா? நிறம் மாறுவதில் பச்சோந்தியை தோற்கடிக்க வேண்டும் என்பது வேண்டுதலா? பாவம்! மருத்துவர்! குதிரை வேஷம் போட்டால் கனைத்து தானே ஆக வேண்டும்!