states

இந்தியாவின் ஏற்றுமதி 6.86 சதவிகிதம் சரிவு!

புதுதில்லி, செப்.16- இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.86 சத விகிதம் சரிந்துள்ளது.  2023 ஆகஸ்ட்டில் இந்தி யாவின் ஏற்றுமதி 34.48 பில்லி யன் டாலராக இருந்துள்ளது.  இதுவே கடந்த 2022 ஆகஸ்ட்   டில் 37.02 பில்லியன் டாலராக  இருந்தது.  அதன்படி கடந்தாண் டோடு ஒப்பிடுகையில், 2023 ஆகஸ்டில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 6.86 சத விகிதம் ஏற்றுமதி சரிந்துள்ளது. இதேபோல், இறக்குமதி யும் குறைந்துள்ளது. கடந்த 2022 ஆகஸ்டில் இந்தியா வின் இறக்குமதி மதிப்பு 61.88  பில்லியன் டாலராக இருந் தது. இது 2023 ஆகஸ்டில் 58.64 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையே யான வர்த்தக பற்றாக்குறை 24.16 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த 7 மாதங்களாக இந்தியாவின் ஏற்றுமதி ஒவ்வொரு மாதமும் அதற்கு முந்தைய மாதத்தைவிட குறைந்து வருகிறது. பெட் ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி அளவு 6 சதவிகி தம் உயர்ந்தாலும், கடந்த ஆண்டை விட விலை 27 சத விகிதம் குறைந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசே வெளி யிட்ட புள்ளி விபரங்கள் மூலம் இவை தெரியவந்துள்ளன.