states

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்

கல்விக் கூடங்கள்தான் ஒரு தேசத்தின்  நம்பிக்கை... அங்கேயே சாதி என்னும் இருட்டும் ரத்தமும் பரவி கிடப்பது எவ்வ ளவு பெரிய அவநம்பிக்கை..? சாதி என்  னும் கொடிய விஷம் இன்னும் எத்தனை  தலைமுறைகளை விழுங்க போகிறது..? இயக்குநர் ராஜூ முருகன் கடந்த இரண்டு நாட்களாக இந்த  படிக்கட்டுகளில் சொட்டிக்கொண்டி ருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். காய்ந்து போனால், அதைப் பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகச்சொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியா மல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்து விடும். மாணவர் சின்னத்துரை வெட்டப்பட்டபோது, பீய்ச்சியடித்த ரத்தம் தெறித்து சிதறிய படிக்கட்டுக்களின் படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் தம்பி சின்னத்துரை விரைவில் குணம டைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம்  என்றால் வீசும் காற்றில் விசம் பர வட்டும்.  இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய  பழக்கங்களும் பரவி வருகிறது.. சம் பந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்  பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட  வேண்டும்.. பாதிக்கப்பட்ட சின்னதுரை மற்றும் அவரது தங்கை விரைவாக குண மடைய வேண்டிக் கொள்கிறேன்.. இவர் கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அள வில் உதவ வேண்டும்..” இயக்குநர் மோகன் ஜி