states

ஒடிசாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு

புவனேஸ்வர், ஜன.29- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மீது உதவிக் காவல் ஆய்வாளர் துப்பாக்கி யால் சுட்டதில் அவர் காயமடைந்தார். நபா தாஸ்  நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா தாஸ். இவர் பிரஜா ராஜ்நகரில் காந்தி சவுக் பகுதியில் நடந்த நிகழ்ச்சி  ஒன்றில் கலந்து கொள்ள வாகனத்தில் சென்றுள்  ளார். அவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கும்  போது, திடீரென உதவிக் காவல் ஆய்வாளர் கோபால் தாஸ், அவரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில்,  அவரது நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட தில் அவர் கீழே விழுந்தார். அமைச்சரை அவரது உதவியாளர்கள், கட்சி ஆத ரவாளர்கள் ஜார்சுகுடா மாவட்டத் தலைமை மருத்துவ மனையில் சேர்த்தனர். அவரது உடல்நிலை கவ லைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் புவனேஸ்வர் கொண்டு செல்லப்பட்டார். ஜார்சுகுடா மாவட்ட காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் குப்தேஸ்வர் போய் கூறுகை யில், உதவி காவல் ஆய்வாளர் அமைச்சரை நோக்கி  துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மேலும் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர் என்றார். அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளர் அந்த இடத்தை விட்டு ஓட வில்லை. இந்தத் தாக்குதலின் பின்னணியில் சில  தனிப்பட்ட பழிவாங்கல்கள் இருப்பதாக சந்தேகிப்ப தாக காவல்துறை உயரதிகாரிகள் கூறினர். சுகாதாரத்துறை அமைச்சர் மீதான தாக்குத லுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் கண்டனம் தெரி வித்துள்ளார். “தாஸ் மீது நடத்தப்பட்ட தாக்கு தலால் நான் அதிர்ச்சியடைந்தேன். தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.” எனக் கூறி யுள்ளார்.

;