சென்னை, மே 24- அஇவிதொச தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மே 20-21 ஆகிய தேதிகளில் நாகர்கோவி லில் மாநில தலைவர் ஏ.லாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் அ.இ. தலைவர் ஏ.விஜயராகவன்மு.எம்பி. பொதுச் செயலாளர் பி.வெங்கட், மாநில பொதுச் செயலா ளர் வீ.அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் எஸ். சங்கர், மாநில செயலாளர்கள் அ.பழநிசாமி, அ.து.கோதண்டன், மாநில துணைத் தலைவர் துரைசாமி, பூங்கோதை, கன்னியாகுமரி மாவட் டத் தலைவர் என்.எஸ்.கண்ணன், மாவட்டச் செய லாளர் மலைவிளைபாசி உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர். மாநிலக்குழு கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. லட்சக்கணக்கான குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை கொடுக்க வழியில்லாமல் பல்வேறு வகையான அரசு புறம்போக்கு நிலங்க ளில் வசித்து வருகிறார்கள். அத்தகைய குடி யிருப்பை வரன்முறை செய்து அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
அரசு ஆட்சேபகர மான நீர்நிலை புறம்போக்குகளில் குடியிருப் போரை அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நீதி மன்றங்களின் உத்தரவை சாக்காக வைத்துக் கொண்டு அரசு எந்திரங்கள் குடிசைகளை குறி வைத்து புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளு கிறது. பல்லாண்டு காலம் ஒரு இடத்தில் வாழ்ந்து வந்த மக்கள் தற்போது சொந்த பூமியில் அகதி களாய் குடும்பத்துடன் பரிதவித்து வருகிறார் கள். அதைப் போலவே அனைத்து சமய நிலங்க ளில் குடியிருப்போரின் வீடுகளுக்கு தாறுமாறாக வாடகையைஉயர்த்தியதோடு, லட்சக்கணக் கான ரூபாய் வாடகைப் பாக்கி செலுத்த நிர்ப்பந் தம் செய்யப்படுகிறார்கள். அறநிலையத் துறை நோட்டீசில் கேட்டுள்ள பணத்தை கட்டத் தவ றியவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படு கிறார்கள். இத்தகைய நடவடிக்கை தமிழகத்தில் தொடர்வது தமிழக நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வாகும். ஆகவே நீர்நிலை புறம்போக்கு வெளியில் குடியிருப்ப வர்கள் வரன்முறை செய்து பட்டா வழங்கவும் அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போ ருக்கு குறைந்த விலையில் தவணை முறை யில் பணம் செலுத்தவும், நீதிமன்ற தலையீட்டை தடுக்கவும், கோவில் நிலங்களை அரசு கையகப் படுத்தி பட்டா வழங்கவும் அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்துகிறோம்.
10 ஆண்டாக செயல்படுத்தப்படவில்லை
வீட்டுமனை இல்லாத குடும்பங்க ளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு சிறப்பு திட்டங்கள் அறிவித்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க கேட்டுக்கொள்கிறோம். ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை மூலம் நிலம் கையகப் படுத்தி பட்டா வழங்கும் நடைமுறை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட வில்லை. இதற்காக ஒதுக்கப்படும் நிதியும் வேறு திட்டங்களுக்கு மடை மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் இருந்தும் நாடோடிகளாய் வாழும் வீடற்றவர்களுக்கு நிலம் கிரயம் பெற்று வீட்டுமனை ஒப்படைப்பு செய்யும் அர சின் நடவடிக்கைகள் நின்று போய் விட்டது. இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நிலம் கையகப்படுத்தி பட்டா வழங்க நடவடிக்கை எடுத்திட மாநிலக் குழு வலியுறுத்துகிறது.
ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களையும், தினக் கூலியையும் உயர்த்துக!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்டத்தில் தமிழகத்தில் நடப்பு நிதி யாண்டில் ரூ.281 தினக்கூலி வழங்கப்படுகிறது. இந்த கூலியும் பெரும்பான்மையான ஊராட்சி களில் முழுமையாக வழங்கப்படாமல் மிகவும் குறைத்துக் கொடுக்கப்படுகிறது. அத்தியா வசிய உணவுப் பொருட்களின் விலை கடுமை யாக உயர்ந்து வருகிறது. அன்றாடச் செலவி னங்களுக்கு வழியில்லாமல் மக்கள் அவதிப் படுகிறார்கள். ஆகவே திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல 50 நாட்கள் வேலையை கூடுதலாக்கி 150 நாட்கள் வேலை யும் தற்போது உள்ளதினக்கூலியிலிருந்து ரூ.100 உயர்த்தி உடனடியாக வழங்கிட தமிழக அரசை அஇவிதொச மாநிலக் குழு வற்புறுத்து கிறது.
காலை 7 மணிக்கே பணித் தளத்திற்கு வர வேண்டும், ஜாப் கார்டு பெறுவதற்கு வீட்டு வரி, தண்ணீர் வரி செலுத்த வேண்டும் என்று கட்டா யப்படுத்தும் ஊராட்சி நிர்வாகத்தின் நட வடிக்கைகளை தடுக்க கோருகிறோம்.
தாலிக்கு தங்கம் தரும் திட்டத்தை தொடர்ந்து பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவிடுக!
மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தில் ரூ.50 ஆயிரமும் தாலிக்கு தங்கமும் கொடுத்து வந்ததை தற்போது தமிழக அரசு நிறுத்தியது மிகுந்த கவலையளிக்கிறது. நிர்வாகக் குறை பாட்டை சீர்செய்து மீண்டும் தாலிக்கு தங்கம் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்திட கேட்டுக் கொள்கிறோம். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் ஜூன் 28 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய் யப்பட்டுள்ளது.