புதுதில்லி, ஆக. 17 - உத்தரப் பிரதேசத்தில் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் அருகே, 200 ஆண்டுகளாக குடியிருக்கும் முஸ்லிம் ஏழைகளின் வீடுகளை இடிக்கும் ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட வீடுகளை, ரயில்வே நிர்வாகம் வேகவேகமாக இடித்துத் தரைமட்டமாக்கி விட்ட நிலையில், எஞ்சியிருக்கும் வீடுகளை இடிப்பதற்கு 10 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ் ணன் கோயிலானது, கிருஷ்ண ஜென்மபூமி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயி லின் அருகே ‘நை பஸ்தி’ என்ற பகு தியில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் குடியிருந்து வரு கின்றனர். இவர்களில் பெரும்பாலா னவர்கள் முஸ்லிம்கள். இந்நிலையில், இந்த குடியி ருப்புகள், ரயில்வேக்கு சொந்த மான அந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாகவும், ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ போன்ற ரயில் களை இயக்குவதற்கு வசதியாக மதுராவில் இருந்து பிருந்தாவன் வரையிலான 21 கி.மீ. தூரத்தை குறுகிய பாதையில் இருந்து அக லப் பாதையாக மாற்றுவதற்காக ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை இடித்தாக வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறியது.
மே மாதமே நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கு எதிராக முஸ்லிம் ஏழை கள், கடந்த மே மாதம் மதுரா நீதி மன்றத்தில் வழக்குகளை தொட ர்ந்தனர். 1880-ஆம் ஆண்டிலிருந்து தாங்கள் வசிக்கும் நிலத்தை இந் திய ரயில்வே உரிமை கோர முடி யாது என்று மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அந்த வழக்கு கள் இன்னும் விசாரணைக்கு வரா மல் நிலுவையில் உள்ளன.
புல்டோசர் மூலம் 100 வீடுகள் இடிப்பு
இந்நிலையில்தான், மோடி அரசின் ரயில்வே நிர்வாகமானது, 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் வீடுகளை, கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் திடு திப்பென புல்டோசருடன் சென்று இடிக்கத் துவங்கியது. அங்குள்ள முஸ்லிம்கள் எவ்வளவோ முயன் றும் இடிப்பு வேலையைத் தடுக்க முடியவில்லை. 100 வீடுகளை ரயில்வே நிர்வாகம் இடித்துத் தரை மட்டமாக்கி விட்டது. அங்கு வசித்து வந்த முஸ்லிம்கள் ஒருசில மணி நேரத்தில் வீடு, வாசல்கள் பறித்துக் கொள்ளப்பட்டு, நடுத்தெருவில் தள்ளப்பட்டனர். வீடுகளை இழந்த அவர்கள் கதறி அழுதனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் யாகூப் ஷா உச்ச நீதிமன்றத்தில், 32-ஆவது சட்டப் பிரிவின் கீழ் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். அதில் அவர் அவசர விசாரணையைக் கோரி னார். ஜூன் மாதம் ரயில்வே நிர்வா கம் வெளியிட்ட குடியிருப்புகளை காலிசெய்யும் அறிவிப்புகளுக்கு எதிராக மதுரா நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போதும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இடிப்பு நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக் கிறது என்று குற்றம் சாட்டினார். இந்த வழக்கு புதனன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், சஞ்சய் குமார் மற்றும் எஸ்.வி.என். பாட்டி அமர்வில் விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் சார் பில் மூத்த வழக்கறிஞர் பிர சாந்தோ சந்திர சென் ஆஜரானார். அவருக்கு உதவியாக வழக்கறி ஞர்கள் கவுசிக் சவுத்ரி, ராதா தர்கர் மற்றும் ஆரோன் ஷா ஆகியோர் ஆஜராகினர்.
சட்டவிரோதமாக வீடுகள் இடிப்பு
அவர்கள், “வீட்டை இடித்த எதிர்மனுதாரரின் (ரயில்வே) நட வடிக்கை முற்றிலும் சட்டவிரோத மானது, தன்னிச்சையானது மற் றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவை மீறுவதாகும். சிவில் வழக்கு நிலு வையில் உள்ள நிலையில், குடி யிருப்பாளர்கள் மதுரா நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர் நீதி மன்றத்தை அணுகினர். ஆனால், ஆகஸ்ட் 12 அன்று வழக்கறிஞர் ஒருவரை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து மாநில பார் கவுன் சில் அளித்த வேலைநிறுத்த அழைப் பின் காரணமாக, நீதிமன்றங்கள் மூடப்பட்டன. இதனால் உ.பி. நீதி மன்றங்கள் பாதிக்கப்பட்ட மக்க ளின் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், இந்தச் சூழலைப் பயன் படுத்திக் கொண்டு, மிகத் தன்னிச் சையான முறையில் மனுதாரர் களின் வீட்டை இடிக்கும் நட வடிக்கையை ரயில்வே நிர்வா கம் துவக்கியுள்ளது” என்று வாதங் களை வைத்தனர். “இதுவரை 100 வீடுகள் இடிக்கப்பட்டு விட்டன. 70 முதல் 80 வரையிலான வீடு கள் மட்டுமே மீதம் உள்ளன. அவற்றையும் இடிக்க அனும தித்தால், தங்களின் முறையீடே பய னற்றதாகி விடும் என்பதால், வீடு களை இடிக்கத் தடை விதிக்க வேண்டும்” என்றும் வழக்கறிஞர் பிரசாந்தோ சந்திர சென் சுட்டிக் காட்டினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதி பதிகள், வீடுகளை இடிக்கும் ரயில்வேயின் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து தற்போதைய நிலையையே அடுத்த 10 நாட்க ளுக்கு தொடருமாறு உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்த விவ காரத்தில் ஒன்றிய அரசும், ரயில்வே யும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், ஒரு வாரம் கழித்து இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதாக அறிவித்தனர்.