states

பாஜக தலைவர்களை வாடிக்கையாக சந்திக்கும் ஆளுநர் விவசாயிகள் தலைவர்களை சந்திக்க மறுத்ததற்கு கண்டனம்

சென்னை, நவ.29- அகில இந்திய ஐக்கிய விவசாயி கள் முன்னணி நவம்பர் 26 அன்று அனைத்து மாநிலங்களில் உள்ள ஆளு நர் மாளிகைகளை நோக்கி அந்தந்த மாநில விவசாயிகள் அணி திரண்டு சென்று ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு, உழவர்களுக்கு பாஜக ஒன்றிய அரசு வாக்குறுதிகளைக் கொடுத்து நிறைவேற்றாத நிலையில், கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வலியுறுத்தி, கோரிக்கை மனு  அளிக்க வேண்டும் என்ற அறைகூவ லைக் கொடுத்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில்  நவம்பர் 26 அன்று பல்லாயிரக்கணக் கான விவசாயிகள் பேரணியாகச் செல்  வது எனவும், கோரிக்கை மனுவைத் தலைவர்கள் நவம்பர் 25 ஆம் தேதி  கொடுப்பது எனவும் முடிவு செய்யப்  பட்டு, அதற்கான அனுமதி கேட்டு 23 ஆம்  தேதியே ஆளுநர் மாளிகை அலுவல கத்திற்குக் கடிதம் கொடுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பல தடவைகள் தொலை பேசி வாயிலாக நினைவூட்டியும், வேண்  டுகோள் விடுத்தபோதும் எந்தவித பதி லும் வரவில்லை. 26 ஆம் தேதி விவசாயிகள் பேரணி யை இராஜரத்தினம் விளையாட்ட ரங்குக்கு அருகில்  நடத்த வேண்டும் என்றும்  ஆளுநர் அலுவலகத்தில் ஐக்  கிய விவசாயிகள் முன்னணியின் தலை வர்கள் மனு கொடுப்பதற்கான ஏற் பாட்டை செய்வதாகவும், சென்னை காவல்துறையின் அதிகாரிகள் கேட்டுக்  கொண்டனர்.

அந்த அடிப்படையில் பேரணியும்  பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டு  முடி வில்  ஐக்கிய விவசாயிகள் முன்னணி யின் தலைமை தோழர்களைக் காவல்துறையினர் தங்கள் வாகனங்க ளில் ஏற்றிக் கொண்டு, ஆளுநர் மாளி கைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி னர். ஆனால் தலைவர்களை ஏற்றி  ஆளு நர் மாளிகைக்குச் செல்லாமல்,  கிண்டி  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற னர். மனுவை ஆர்டிஓவிடம் கொடுக்கு மாறும், அவர் அதை ஆளுநர் மாளி கைக்கு அனுப்புவார் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘ஆளுநர் மாளிகையில், விவசாயத் தலைவர்களிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்’ என்பதாகும். தாங்கள் காவல்துறை அதிகாரி களாலும் ஏமாற்றப்பட்டு விட்டதை  உணர்ந்த தலைவர்கள் கிண்டி வட் டாட்சியர் அலுவலக வளாகத்திலும், பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 6  மணிவரை ஜிஎஸ்டி சாலை அருகிலும்  அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு  தலைமைச் செயலகத்தில் மக்கள் தொடர்பு மற்றும்  துயர் துடைப்பு செயலாளர் ஜெக நாதன்  மூலமாக மனுவைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலை வர்களிடம் கோரிக்கை மனுவை வாங்  கிக் கொண்ட நிலையில் தமிழகத்தில்  மட்டும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் எதேச்  சதிகாரமான, அடாவடித்தனமான போக்கை வெளிக்காட்டும் வகையில் முன்னணியின் தலைவர்களிடம் மனுவை வாங்கிக் கொள்ள மறுத்தார். பாஜக தலைவர்களை சந்திப்பதை தினசரி வாடிக்கையாகக் கொண்ட ஆளுநர் ரவி விவசாய சங்கத் தலை வர்களை சந்திக்க மறுத்ததை ஐக்கிய  விவசாயிகள் முன்னணி மிக வன்மை யாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவலை தெரி வித்துள்ளார்.

;