அரியலூர், ஜூன் 26 - குறுவைக்கு காப்பீடு நிறுவனங்கள் பயிர்க்காப்பீடு செய்ய முன் வராத பட்சத்தில் தமிழக அரசு தனது சொந்த நிதியை ஒதுக்கி இழப்பீட்டை ஈடுசெய்யக் கூடிய அளவிற்கு பயிர்க்காப்பீட்டை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இவ்வருடம் மழை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால் தமிழக அரசு கர்நாடக அரசுடன் பேசி காவிரியில் இருந்து பற்றாக்குறை காலங்களில் பகிர்வு அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கையை இப்போதில் இருந்தே மேற்கொள்ள வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக குறுவை சாகு படிக்கு பயிர்க்காப்பீடு இல்லாத நிலை யில் தற்போது நிச்சயமற்ற நிலமை உள்ளது.
பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு செய்ய முன்வராத பட்சத்தில் தமிழக அரசு தனது சொந்த நிதியை ஒதுக்கி இழப்பீட்டை ஈடுசெய்யக் கூடிய அளவிற்கு பயிர்க் காப்பீட்டை வழங்க வேண்டும். அதிகபட்ச மின் பயன்பாட்டு நேரம் என ஒரு கட்டணம் விதிப்பது மிக மிக ஆபத்து. இந்த ஆண்டு வணிக நிறுவனங்களுக்கும் வரும் ஆண்டு வீடுகளுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளனர். மின் கட்டணம் உயரும் என்றால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும். இது மிக வும் ஆபத்தானது. மோடி அரசாங்கம் மக்கள் எவ்வளவு பாதிப்புக்குள்ளானாலும் அதைப்பற்றி கவலை இல்லாமல் உள்ளது. விவசாய விளைபொருட்களை இரட்டிப்பு விலை உயர்த்துவோம் என மோடி கூறி இருந்த நிலையில் இடுபொருட் கள் விலை 30 சதவீதம் விலை உயர்ந்துள் ளது. ஆனால் நெல்லுக்கான ஆதாரவிலை யை ‘ஐந்து சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. இது உணவு பாது காப்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை. இதில் அரசு மெத்தனமாக உள்ளது. இப்பகுதியில் நிலக்கரி திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அத்திட்டம் நிறைவேறாமல் மீண்டும் நிலங்களை விவ சாயிகளிடமே ஒப்படைக்க தாமதப்படுத்து வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்ற னர். அதனை உடனடியாக தமிழக அரசு தலையிட்டு நில உரிமையாளரிடம் நிலத்தினை, ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.