states

3 கட்ட போராட்டம்: அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வக நுட்பனர்கள் அறிவிப்பு

சென்னை, ஜன. 30- அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வக நுட்ப னர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில் 3 கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலப் பொதுச் செயலாளர் வீ.பார்த்தசாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத்  தலைவர் மா.செல்வகுமார் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் 11 புதிய  மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை களுக்கு நிரந்தர ஆய்வக நுட்பனர் பணியிடங் களை உருவாக்க வேண்டும், 15 ஆண்டுகளாக அரசின் பரிசீலனையில் உள்ள முதன்மை ஆய்வக  அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், 45 (சிடிஓ) பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிலை  1 உருவாக்கத்தில் உள்ள கோப்புகளை நிறைவு செய்து பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும்.

ஆய்வக நுட்பனர் நிலை 2 பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி  ஆய்வக நுட்பனர்களில் 1.04 2003க்கு முன்னர் பணியிலிருசப் வர்களை பொது வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். அரசாணை 1.4.2003க்கு முன்பு பணியில் இருப்பவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி  பிடித்தம் செய்ய வேண்டும், அரசாணை 1577இன்படி  பணியில் சேர்ந்தவர்களுக்கு சேர்ந்த நாளில் இருந்து பணி வரன்முறை செய்ய வேண்டும், ஆய்வக நுட்பனர் கவுன்சில் அரசாணை 417ஐ செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக பிப்ரவரி மாதம் முதல் மூன்று வாரங்களில் கோரிக்கைகளின் நியாயத்தை வலி யுறுத்தி அனைத்து ஆய்வக நுட்பனர்கள், பட்டய,  பட்ட படிப்பு மாணவர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி முதல்வரின் பரிசீலனைக்கு அனுப்புவது. இரண்டாவது கட்டமாக, பிப்ரவரி 20 அன்று மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் பெருந் திரள் முறையீடு மருத்துவக் கல்வி இயக்ககம் முன்பு  நடத்தி, மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் முதன்மைச் செயலாளரிடம் முறையீடு செய்வது. மூன்றாம் கட்டமாக மார்ச் 1 அன்று 50க்கும் மேற்பட்ட  ஆய்வக நுட்பனர்கள் பங்கேற்கும் உண்ணா நிலை போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;