இன்று வாக்குப் பதிவு
ஹைதராபாத், நவ. 29 - 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்ட மன்றத்திற்கு வியாழனன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 3.17 கோடி வாக்கா ளர்கள் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 35,356 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 17 இடங்களில் போட்டியிடுகிறது.
கோடநாடு வழக்கு அறிக்கை தாக்கல்
உதகை, நவ. 29 - முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்த மாக நீலகிரியில் உள்ள கோட நாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23 அன்று கொள்ளைச் சம்பவம் நடை பெற்றது. பாதுகாவலர் ஓம்பகதூர் என்பவர் படு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் உதகை நீதிமன்றத்தில் புதனன்று தாக்கல் செய்தனர். குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்ட பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் ஆகியோரின் 8 செல்போன் கள், 4 சிம்கார்டுகள், 3 பென் டிரைவ்களில் இருந்த விவ ரங்களை மூடி மூத்திரையிடப் ப்பட்ட உறையில் சமர்ப்பித்துள்ளனர்.
அண்ணாமலை நடைபயணம் சாலையை சேதப்படுத்தி கொடிக்கம்பம் நட்ட பாஜக மீது வழக்குப் பதிய வலியுறுத்தல்
தஞ்சாவூர், நவ.29- பாஜக தலைவர் அண்ணாமலை வருகைக்காக, சாலையை சேதப்படுத்தி, கொடிக்கம்பங்கள் நட்ட பாஜகவினர் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கட்சி கூட்டமைப்பு நெடு ஞ்சாலை துறையை வலியுறுத்தியுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். செவ்வாய்க்கிழ மை மாலை பேராவூரணியில் நடைபெற்ற நடைபயணத்திற்காக, பேராவூரணி கடைவீதியில் அனுமதியின்றி ஏராளமான பிளக்ஸ் பேனர்களும், செண்டர் மீடியனில் கொடிக் கம்பங்களும் நடப்பட்டிருந்தன. பொதுக்கூட்டம் நடைபெறும் நீலகண்டப் பிள்ளையார் கோயில் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலையில் பள்ளம் தோண்டி, 5 அடிக்கு ஒரு கொடிக்கம்பம் என்ற வகையில், இரண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான உயரமான கொடிக் கம்பங்கள் பேரூராட்சி, நெடுஞ்சாலைத் துறை அனுமதியின்றி நடப்பட்டிருந்தன. மேலும், பொதுப் பணித்துறை அலு வலகத்தின் உள்ளே சாரம் அமைக்கப்பட்டு பிரதமர் மோடியின் 60 அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள், சாலையை சேதப்படுத்தி நட்ட கொடிக் கம்பங்கள் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக மக்கள் புரட்சி கழகம், திராவிடர் விடுதலை கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சி களின் நிர்வாகிகள் முன்னிலையில் நடை பெற்ற அனைத்து கட்சி கூட்டமைப்பு கூட்டத்தில், ‘சாலையை சேதப்படுத்தி கொடிக்கம்பம் நட்ட பாஜக நிர்வாகிகள் மீது, பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக வழக்குப் பதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றி நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறி யாளரிடம் மனு கொடுத்துள்ளனர். இதே போல் காவல்துறை, பேரூராட்சி அலுவலர்களிடமும் மனு அளிக்கப்பட்டது.
தில்லியில் பரபரப்பை ஏற்படுத்திய லுப்தான்சா விமானம்
லுப்தான்சா ஏர்லைன்ஸ் (ஜெர் மனி) நிறுவனத்திற்கு சொந்த மான விமானம் ஜெர்மனியின் மூனிச் நகரில் இருந்து தாய்லாந்து நாட் டின் பாங்காக் நகருக்கு சென்று கொண்டு இருந்தது. இடைநில்லா விமானமான இந்த லுப்தான்சா ஏர்லைன்ஸ் திடீரென புதனன்று காலை தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரை யிறங்க அவசர அனுமதி கோரியது. இத னால் தில்லி விமான நிலையத்தில் பதற் றம் தொற்றிக் கொண்டது. விமானம் தரையிறங்கிய பின் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் அவசரமாக தரையிறக் கப்பட்டது தெரியவர கணவனை கைது செய்து, மனைவியை தொடர்ந்து அதே விமானத்தில் பாங்காக் அனுப்பி வைத்த னர் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள். எனி னும் விமானம் தரையிறங்கும் சூழலில் தில்லி விமான நிலையமே அமைதியானது. பாகிஸ்தான் மறுப்பு முதலில் லுப்தான்சா ஏர்லைன்ஸ் அதி காரிகள் பாகிஸ்தானில் தரையிறக்க அனு மதி கோரியுள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதி மறுக்கவே தில்லி யில் அந்த விமானம் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
டிலைட் பால் விலையில் மாற்றம் இல்லை: அமைச்சர் விளக்கம்
சென்னை,நவ.29- டிலைட் பால் அறிமுகப்படுத்தி யது மூலமாக, எவ்வித மறைமுக விலை ஏற்றம் செய்யப்படவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர்களுடன் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:- பச்சை நிற பால் பாக்கெட் குறைக் கப்படுவதாக புகார் செய்பவர்கள் முகவர்கள் இல்லை. எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிக கொழுப்பு சேர்க்காமல், டிலைட் பாலை மே மாதம் அறிமுகப்படுத் தினோம். தற்போதைய காலத்திற்கு ஏற்ப, இந்த டிலைட் பாலை அறிமுகப் படுத்தி உள்ளோம். சராசரியாக 3.5 விழுக்காடு கொழுப்பு சத்துள்ள பால் வழங்குவதால், அதில் கூடுதல் கொழுப்பு சேர்க்காமல் பசும் பாலை அதே தரத்தில் கொடுக்கிறோம். இந்த பாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதில், கொழுப்பு எடுத்தல், குறைத் தல் என்பது தவறான வாதம். டிலைட் பால் அறிமுகப்படுத்து வதன் மூலம் மறைமுக விலை ஏற்றம் செய்யப்படவில்லை. வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில் ரூ.12 முதல் ரூ.16 வரை விலை குறைவுதான். பச்சை நிற பால் பாக்கெட்டில் கூடுதலாக கொழுப்புச் சத்து சேர்க்கும் செலவினங்களை குறைப் பதற்காகவே இந்த டிலைட் பாலை அறிமுகம் செய்துள்ளதாகக் கூறுவது தவறு. ஆரோக்கியமான பால் வழங்க வேண்டும் என்ற நோக்கில் டிலைட் பாலை வழங்கு கிறோம். ஆவின் பால் கொள்முதல், விற்பனை குறைந்துவிட்டது என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சிலர் உள்நோக்கத்துடன் கூறு கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
அமலாக்கத்துறை சம்மன்: திமுக எம்.பி. ஆஜராகவில்லை
சென்னை,நவ.29- கடந்த 2019 ஆம் ஆண்டு நடை பெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது அவருக்கு தொடர் புடைய இடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மேலும், அவ ருக்கு நெருக்கமானவர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களிலும் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 28 ஆம் தேதி நேரில் ஆஜ ராகி விளக்கம் அளிக்கும்படி கதிர் ஆனந்துக்கு அண்மையில் அமலாக் கத் துறையினர் சம்மன் அனுப்பி யிருந்தனர். ஆனால், கதிர் ஆனந்த் ஆஜராகவில்லை என அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, நவ.29- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்த பருவ நிலை காரணமாக குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் போன்ற வற்றால் அதிகளவில் பாதிக்கப்படு கிறார்கள். தனியார் மருத்துவமனை கள், சிறிய கிளினிக்குகளில் கூட கூட்டம் நிரம்பி வழிகிறது. மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த பொது சுகாதாரத் துறையின் சார்பில் கடந்த மாத இறுதியில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டன. டிசம்பர் இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில், “தமிழ்நாட்டில் இதுவரை புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உரிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.