சென்னை,டிச.27- மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு டன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளி யிட்டது. இதையடுத்து, மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்பு கள் உள்ளன. இதுவரை 1.40 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் வரும் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இன்னும் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். எனவே, இதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எவ்வளவு பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்பதை, இன்னும் 2 நாட்கள் கழித்து ஆய்வு செய்யவுள்ளோம். அதன்பிறகு, இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று முடிவு செய்யப்படும்’’ என்றார்.