states

ஒரு கட்சி, ஒரு நபருக்கா தேர்தல் ஆணையம்?

வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் போதிய கால அவகாசம் வழங்கவில்லை. ஒரு கட்சி (பாஜக), ஒரு நபருக்கு (மோடி) ஏற்றவாறு தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்புகளான சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, நீதித்துறை போன்றவற்றை எதிர்க்கட்சிகளை பழிவாங்க ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது.  உதாரணத்திற்கு இராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, க.பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம்  செய்து வைக்க ஆளுநர் மறுக்கிறார். நாட்டில் சர்வாதிகாரம், பாசிசம் தலைதூக்கி நிற்கிறது.  எனவே, அரசியல் அமைப்பு சட்டத்தையும், அத னடிப்படையில் உருவான அமைப்புகளையும், மதச்சார்பின்மையை பாதுகாக்க வகுப்புவாத சக்திகளை முறியடிக்க வேண்டும். பாஜகவிலிருந்து அதிமுக பிரிந்துவிட்டது.  திமுக அணி உடையும் என்ற கனவு பலிக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக தலைமை யில் கொள்கைப் பூர்வமான, பலம் பொருந்திய  கூட்டணி அமைந்துள்ளது. 40 தொகுதிகளையும் திமுக அணி கைப்பற்றும். எதிர்த்தரப்பில் சில கட்சிகள் சீட்டுக்கும் மற்றதற்கும் ஆளுக்கு ஒரு  பக்கம் பேரம் பேசுகின்றனர். அந்த கட்சிகளுக்கு  எந்த கொள்கையும் இல்லை. தமிழகத்தில் மத வாத சக்திகள் கிஞ்சித்தும் வெற்றிபெறமுடியாது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகம் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கேட்டது. மோடி அரசு ஒரு பைசா கூட தரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி தரவில்லை. ஆனால் பிரதமர் பொய் மட்டுமே பேசுகிறார். கட்சிகளை மிரட்டி கூட்டணியில் சேர்க்க முயல்கின்றனர். தெலுங்கானா ஆளு நர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தில் போட்டி யிட்டால் பரிதாபமாக தோற்பார்.

;