states

கிருஷ்ணகிரியில் பொருளாதார ஆணவப் படுகொலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

சென்னை, மார்ச் 22- கிருஷ்ணகிரியில் ஏழை பணக்காரன் என்கிற பாகுபாட்டின் காரணமாக இளைஞர் ஜெகன் பொரு ளாதார ஆணவப் படுகொலை செய்யப் பட்டுள்ளார். இதனைக் கண்டித்தும்  ஆணவப் படுகொலைக்கு எதிரான  தனிச் சட்டத்தை நிறைவேற்ற வலி யுறுத்தியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் அதே மாவட்டத்தின் அவதானப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்ப வரை காதலித்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டார்.  ஜெகன் டைல்ஸ் ஒட்டும் வேலை  செய்கிற ஒரு தொழிலாளி என்கிற காரணத்தினால் ஒரே சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரண்யா வின் வீட்டில் இத்திருமணத்தை ஏற்கவில்லை.  இவர்கள் இருவரையும் பிரித்து விடவேண்டும் என பல்வேறு முயற்சி களை சரண்யாவின் குடும்பத்தார் மேற்கொண்டு வந்துள்ளனர். இருவரையும் பிரிக்க முடியாமல் போனதால் 21.03.2023 அன்று ஜெகன் கிருஷ்ணகிரி – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் டேம் கூட் ரோடு பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அவரை வழிமறித்து சரண்யாவின் தந்தை சங்கர், சகோதரர் அருள் மற்றும் உறவினர் திம்மராயன் ஆகியோர் கொடூரமாக படுகொலை செய்துள்ளனர்.

சரண்யா செவிலியர் படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தன் மகள் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்யும் ஒரு தினக்கூலியான ஜெகனை திருமணம் செய்தது பிடிக்காமல் ஜெகனை தான் கொன்ற தாகக் கூறி சரண்யாவின் தந்தை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.  ஆணவப் படுகொலைகள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. இந்தி யாவில் நடைபெறக்கூடிய பெரும்பான்மையான ஆணவப் படுகொலைகளுக்கு சாதியே அடிப் படையாக இருக்கிறது. ஆனால் சாதியைத் தவிர்த்து மதம், இனம், பொருளாதாரக் காரணங்களாலும் தனது குடும்ப கௌரவம் பாதிக்கப்பட்டதாக கருதி ஆணவப் படுகொலைகள் நடைபெறுகின்றன. எனவே தான், சாதி, மதம், இனம், பொருளாதாரம் ஆகிய எந்த ஒன்றின் பேரிலும், காதலித்து திருமணம் செய்து கொள்கிற இணையர் களை பிரிக்கவோ தாக்கவோ கொலைசெய்யவோ முற்படுவதற்கு எதிராக ஆணவப் படுகொலைக்கு எதி ரான தனி சிறப்புச் சட்டத்தை தீண்டா மை ஒழிப்பு முன்னணி நீண்டகாலமாக வலியுறுத்திவருகிறது.  தற்போது கிருஷ்ணகிரியில் நிகழ்த்தப்பட்டுள்ள ஜெகன் படு கொலையும் ஆணவப் படுகொலை க்கு எதிரான தனி சிறப்பு சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. எனவே ஒன்றிய, மாநில அரசுகள் உட னடியாக சாதி, மதம், இனம், பொரு ளாதாரம் ஆகிய வேறுபாடு களின் காரணமாக கொலைசெய்யப் படுவதை தடுத்திட தனி சிறப்பு சட்ட த்தை இயற்றிட வேண்டும் என இந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

;