states

ஒன்றிய அரசின் அவசரச் சட்டத்தை திமுக எதிர்க்கும்

சென்னை, ஜூன் 1- ஒன்றிய அரசின் அவசரச் சட்டத்தை தி.மு.க எதிர்க்கும் என தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித் துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழ னன்று (ஜூன் 1) முகாம் அலுவலகத்தில் தில்லி முதல மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சியை சுதந்திரமாக செயல் படவிடாமல் பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தில்லி துணைநிலை ஆளுநர் மூலமாகத் பல்வேறு தொல்லைகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. “பணியாளர்கள்” தொடர்பாக 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் தில்லி அரசுக்கு சாதகமான ஒரு தீர்ப்பை வழங்கி யிருக்கிறது. ஆனால் அது நிறை வேறக்கூடாது என்ற ஒரு எண்ணத்தோடு பாஜக ஆட்சி, அதை எதிர்த்து ஒன்றிய அரசு இன்றைக்கு ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்து இருக்கிறது. இந்த அவசரச் சட்டத்தை நிச்சயமாக திமுக கடுமை யாக எதிர்க்கும், அதில் எந்த மாற்றமும் கிடையாது. எனவே, இதுகுறித்து இரு முதலமைச்சர்களும் எங்களோடு கலந்து பேசி, மற்ற மாநில முதலமைச்சர்களும் பல்வேறு கட்சியின்  தலைவர்களும் என்னென்ன நிலையில் இருக்கிறார்கள் என்ற அந்த சூழ்நிலையைப் குறித்து நாங்கள் கலந்து பேசினோம்.  நிச்சயமாக, அனைத்து மாநில முதலமைச்சர்களும் அகில இந்திய அளவிலுள்ள கட்சி தலைவர்களும் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்று நான் இந்த நிகழ்ச்சியின் மூலமாக கேட்டுக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேள்வி: 12ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பற்றி பேசியிருக்கிறீர்களா?

பதில்: அது பற்றியும் பேசியிருக்கிறோம். அது சூழ்நிலை வருகிறபோது சொல்கிறோம். 12 ஆம் தேதி  நிதிஷ்குமார் கூட்டத்தைக் கூட்டுவதாக முடிவு செய்திருக் கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அதில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. காரணம் ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார். அதேபோல் 12 ஆம் தேதி என்னைப் பொறுத்த வரையில், நானும் கலந்துகொள்ள முடியாத நிலை. காரணம், மேட்டூர் அணையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இருக்கிறது. ஆகவே, தேதியை மாற்றி வையுங்கள் என்று  நானும் சொல்லியிருக்கிறேன், கார்கேவும் சொல்லி யிருக்கிறார். இப்போது கெஜ்ரிவாலிடமும்  நாங்கள் சொல்லியிருக்கிறோம். அவரும் தேதி மாற்றுவதற்கான முயற்சியில் நான் ஈடுபடுகிறேன், கட்டாயமாக மாற்றி வைக்கப்படும் என்ற உறுதியை தந்திருக்கிறார்.

கேள்வி: ஒன்றிய அரசு, மாநில அரசின் அதிகாரங் களை தொடர்ந்து பறித்து வருகிறது. இந்த சூழ்நிலை யில் இப்படியான ஒரு ஒன்றிணைப்பு என்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: ஜனநாயகத்தைக் காப்பதற்கு இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு அவசியம் தேவை. இது தொடர வேண்டும். இது நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டுமல்ல, ஜன நாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இது தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம், அது தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்றும் முதலமைச்சர் கூறினார்.

;