சென்னை, ஏப்.18- இளையராஜா கருத்தை விமர்சிக்க மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு திமுக பதிலளித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பொறுப்புள்ள பதவியில் அமர்ந்துள்ள எல்.முருகன் பொறுப்பற்ற முறையில் செய்தி கள் வெளியிடுவது அவருடைய அறியாமை யை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு திமுகவைச் சேர்ந்த யாரும் எவ்வித கருத்தும் தெரிவிக்க வும் இல்லை. தெரிவிக்க விரும்பவும் இல்லை. பிரதமர் மோடி குறித்து, இளையராஜா கருத்து சொல்வது எல்.முருகன் வாதத்தின் படி, எப்படி கருத்து சுதந்திரமாகுமோ அதே போல், இளையராஜாவின் கருத்து குறித்து விமர்சனம் செய்திட, மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதை எல்.முருகன் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே, முரசொலி இடம் குறித்து தாங்கள் பேசியது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், ஒரு வழக்கினை தங்கள்மீது தொடர வழிவகுக்க வேண்டாம் என்றும், தங்களின் இப்போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால், திமுக சட்டரீதி யாக நடவடிக்கை எடுக்கும் என்பதனை எச்சரி க்கையாகவும், அறிவுரையாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.