states

தீக்கதிர் விரைவு செய்திகள்

புதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு

தருமபுரி, ஜூன் 11-  தருமபுரி மாவட்டம் பூதிநத்தம் கிராமத்தில் நடைபெற்று வருகின்ற அகழாய்வில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  புதிய கற்காலத்தில் நிலத்தை உழுவதற்கு ஏர்கலப்பையாகவும் வெட்டுவதற்கு கோடாரியாகவும் பயன்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த புதிய கற்கால கருவி 22 செ.மீ. நீளமும் 7.74 செ.மீ. அகலமும் அதிகபட்ச தடிமன் 4.7 செ.மீ. கொண்டதாக உள்ளது.

அமித்ஷா பொதுக்கூட்டத்திலிருந்து கூட்டமாக வெளியேறிய மக்கள்

வேலூர், ஜூன் 11- வேலூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் ஒன்றிய உள்  துறை அமைச்சர் அமித்ஷா பேசிக்  கொண்டிருக்கும்போதே மக்கள்  கூட்டம் கூட்டமாக வெளியேறினர். இதனால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வேலூர் அருகே உள்ள கந்த னேரியில் ஒன்றிய பாஜக அரசின்  9 ஆண்டு சாதனைகளை விளக்  கப்போவதாகக்கூறி ஞாயிறன்று பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்  சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். இந்த பொதுக்கூட்டத்திலி ருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக  வெளியேறினர். மக்கள் வெளி யேறாமல் இருக்கைகளில் அம ரும்படி பாஜகவினர் வேண்டு கோள் விடுத்தனர். பாஜகவினரின் வேண்டுகோளையும் மீறி மக்கள்  கூட்டம் கூட்டமாக வெளியேறிய தால் பெரும்பாலான பகுதியில் இருக்கைகள் காலியாகின. இத னால் மாநில, மாவட்ட பாஜக  தலைவர்கள் அதிர்ச்சியடைந்த னர். மேலும் அமித்ஷா பேசிக் கொண்டிருந்த போது பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந் தது.

1500 சிறப்பு பேருந்துகள்

சென்னை,ஜூன் 11-  தமிழ்நாட்டில் கோடை விடு முறை முடிந்து திங்கட்கிழமை பள்ளி கள் திறக்கப்படுகின்றன. இதை யொட்டி சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கும், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் வெள்ளிக் கிழமை (ஜூன்9) முதல் சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டு வருகின்றன. 9, 10, 11 ஆகிய 3 நாட்களும் 1500 சிறப்பு பேருந்து கள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின்போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது.  கோயம்பேடு பேருந்து நிலை யத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணி அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரிவு காவலர்கள் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அரிக்கொம்பன் யானை குறித்து அச்சப்படத் தேவை இல்லை

நாகர்கோவில், ஜுன் 11- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஞாயிற்றுக்கிழமை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானையானது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில்  விடப்பட்டது. யானையின் நடமாட்டத்தினை களக்காடு முண்டந்துறை வனப் பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். யானையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காலர்  மூலம் யானையின் இருப் பிடம்  கண்காணிக்கப்பட்டு வருகிறது.  அரிக்கொம்பன் யானையானது தற்பொ ழுது நல்ல உடல் நலத்துடன் உள்ளது. சீராக உணவு மற்றும் நீர் எடுத்துக்கொள்கிறது. தொடர்ந்து இந்த யானையானது வன அதி காரிகள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவ லர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவ தால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டிருக்கிறார்.