states

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: துபாயில் பதுங்கியவர்களை பிடிக்க முடிவு

சென்னை, ஆக 17- துபாயில் பதுங்கியுள்ள, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி இயக்குநர்களை கைது செய்ய, பொருளாதாரக் குற்றத் தடுப்பு காவல்துறையினர் வியூகம் வகுத்துள்ளனர். சென்னை, அமைந்தகரையை தலைமையகமாக வைத்து, ஆருத்ரா எனும் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குநர்கள், ராஜசேகர் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி மற்றும் கூட்டாளிகள் அதிக வட்டி தருவதாக, 1 லட்சம் பேரிடம், 2,438  கோடி ரூபாய் மோசடி செய்துள்ள னர். இதுகுறித்து பொருளாதார குற்ற தடுப்பு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ராஜசேகர், மகாலட்சுமி ஆகி யோரை தேடப்படும் குற்றவாளி யாக அறிவித்துள்ளனர். இருவரும் துபாயில் பதுங்கி இருப்பது தெரிய  வந்துள்ளது. அவர்களை கைது செய்ய, ‘இண்டர்போல்’ எனும் சர்வ தேச காவல்துறையின் உதவியை நாடி உள்ளனர். ‘லுக் அவுட்’ எனும் தேடப்படும் குற்றவாளிகள் நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜசேகர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் குறித்த தகவல்களை சேகரிக்க வும், கைது செய்யவும், துபாய் மற்றும் இந்தியா இடையே உள்ள,  பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இந்த ஒப்பந்தம் அடிப்படை யில், சென்னையில், ஆருத்ரா நிதி  நிறுவன மோசடி வழக்கு விசாரணை  நடக்கும் நீதிமன்றத்தில் ஒப்புதல்  பெற்று, அதை துபாய் நீதிமன்றத் தில் சமர்ப்பிக்க உள்ளனர். இதன்  வாயிலாக, அந்நாட்டு காவல்துறை யினர், ராஜசேகர் மற்றும் மகாலட்சுமி ஆகியோரை தங்களி டம் ஒப்படைப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.