காஞ்சிபுரம், ஏப்.21- கச்சாபட்டு 130 விழுக்காடு வரைக் கும் விலை உயர்ந்துள்ளதை குறைக்கக் கோரி மாநிலம் முழுவதும் கடைய டைப்பு மற்றும் மனித சங்கிலி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்ந்துகொண்டே வரும் கச்சாபட்டு விலை உயர்வு குறித்து காஞ்சிபுரத்தில் சிஐடியு மாநில கைத்தறி சம்மேளன பொதுச் செயலாளர் இ. முத்துகுமார் தலைமையில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. பட்டு சரிகை-சேலை உற்பத்தி சங்கச் செயலாளர் பெருமாள், வர்த்தக சங்கத் தலைவர் ரங்கநாதன், தொமுச தஞ்சாவூர் தங்கவேலு, சிஐடியு சங்க தலைவர்கள் நாகேந்திரன், முருகன் பட்டு கூட்டுறவு சங்க துணைத் தலை வர் இளங்கோவன், பருத்தி பட்டு நெசவு தொழிலாளர்கள் சிஐடியு சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்கத் தலைவர்கள், இயக்கு நர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளி வர்த்தகர்கள், கோரா வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பட்டு நெசவு தொழில் நெருக்கடி குறித்து விவாதிக்கப்பட்டது. பட்டு உற்பத்திக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை நீக்கம் செய்து பட்டு சேலை விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி விதித்தால் தற்போதுள்ள நிலைமை கட்டுக்குள் கொண்டு முடியும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. கோராபட்டு விலையை ஒரே மையத்தில் தீர்மானிக்கும் ஒரு முகப்படுத்தப்பட்ட விலை நிர்ணய முறையை ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும். கைத்தறி பட்டு நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கச்சா பட்டு கொள்முதலுக்கு ஒன்றியஅரசு வழங்கும் 15 விழுக்காடு மானியத்தை 30 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களை சந்தித்த சிஐடியு கைத்தறி சம்மேளன பொதுச் செயலாளர் இ.முத்துக்குமார்,“ கச்சா பட்டு விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆகி யோர் இணைந்து தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் மனிதசங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்துள் ளோம்” என்றார்.