states

கோவையில் மோடி: நழுவிய வானதி

எத்தனைத் தொகுதிகளில் போட்டி, யார் யாருடன் கூட்டணி, இன்னும் எத்தனைக் கட்சிகளை வளைக்க முடியும் என எதுவும் தெரியாத நிலையில் திங்களன்று கோயம்புத்தூர் வந்தார் பிரதமர் மோடி. இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “இந்த முறை தமிழகத்தி லிருந்து வெற்றி பெறும் தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளர்கள் பிரதமர் மோடிக்கு மக்களவையில் பக்க பலமாக இருப்பார்கள்” என்று பாஜகவின் நப்பாசையை வெளிப்படுத்தினார். பிரதமர் கோயம்புத்தூரில் தங்க உள்ள நிலையில் முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்களை சந்திக்க வாய்ப்புள்ளதா எனக் கேட்டதற்கு, அது இனிமேல் தான் தெரிய வரும்; இப்போதைக்கு யார் யார்  வருகிறார்கள் என எங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றார். அப்போது, வாயப்புள்ளது எனப் போட்டுக்கொள்ளலாமா என செய்தியாளர் கேட்டதற்கு, “வாய்ப்பு உள்ளது என்றோ வாய்ப்பு இல்லை என்றோ” போட்டுக் கொள்ளுங்கள். அப்புறம், நீங்கள் சொன்னீர்களே எதுவும் நடக்கவில்லையே என கேள்வியெழுப்பக் கூடாது எனக் கூறி நழுவிக்கொண்டார்.

;