states

img

அந்தமான் சிறையில் கம்யூனிஸ்ட் தலைவர்

சுதந்திரப் போராட்ட வீரரும், வங்கத்தைச் சேர்ந்த இந்தியப் புரட்சியாளருமான நிரஞ்சன் சென்குப்தா 1904 ஜூலை 26 அன்று ஜலோகதி நகரில் (தெற்கு வங்கதேசத்தின் பாரிசால் மாவட்டம்) பிறந்தார்.
இந்தியாவின் முதல் மாணவர் பேரவைத் தேர்தல் ரிப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நிரஞ்சன் சென்குப்தா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு, டாக்கா அனுஷீலன் சமிதியின் (ஆங்கிலேய எதிர்ப்பு புரட்சியாளர்களை கொண்ட அமைப்பு) பாரிசல் பகுதி கிளைத் தலைவராக செயல்பட்டார். 1930 ஆம் ஆண்டு மெச்சுபஜார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நிரஞ்சன், 1932 இல் மற்ற புரட்சியாளர்களுடன் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த காலங்களில், கம்யூனிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார் நிரஞ்சன்.
விடுதலைக்குப் பின் ஒரு மார்க்சிஸ்ட் ஆக உருவெடுத்த அவர், 1938 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியின் அரசியல் தலைமைக் குழுவால் அமைக்கப்பட்ட உட்குழு உறுப்பினர்களில் இவரும் ஒருவரானார். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் முக்கியப் பங்காற்றியவர். 1957 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நிரஞ்சன் சென்குப்தா, பிஜ்பூர் தொகுதியின் எம்எல்ஏ-வானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமான போது, நிரஞ்சன் சென்குப்தா மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்தார். 1967-1969 ஆம் ஆண்டுகளில் இடது முன்னணி அரசின் அமைச்சராகவும் செயல்பட்ட நிரஞ்சன், 1969 செப்டம்பர் 4 அன்று காலமானார்.

இன்று தோழர் நிரஞ்சன் சென்குப்தா நினைவு தினம்