states

தீக்கதிர் விரைவு செய்திகள்

5-வது புவி சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்

நிலவின் தென் துரு வத்தில் ஆய்வு செய்வதற் காக அனுப்பப்பட்ட சந்திர யான் -3 விண்கலம், புவி  வட்டத்தின் 5- வது சுற்றுப் பாதைக்கு உயர்த்தப்பட்டது. அந்தவகையில் சந்திர யான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு ஐந்தாவது முறையாக அதி கரிக்கப்பட்டுள்ளது. தொட ர்ந்து வருகிற ஆகஸ்ட் 1-இல் புவிவட்டப் பாதை யில் இருந்து விலகி விண் கலம் நிலவின் வட்டப் பாதைக் குள் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேகாலயா முதல்வர்  அலுவலகம் மீது  பாஜக தாக்குதல்!

மேகாலயா மாநிலத்தில் முதல்வர் கான்ராட் சங்மா முகாம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் திரிணா முல் காங்கிரஸ்; 7 பேர் பாஜக நிர்வாகிகள் ஆவர். துரா நகரத்தை மேகாலயா மாநி லத்தின் குளிர்கால தலைநக ராக அறிவிக்க வேண்டும் என போராடிவரும் அச்சிக் (ACHIK) அமைப்பினருடன் முதல்வர் கான்ராட் சங்மா  பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டை வந்தடைந்த காவிரி நீர்!

தென்மேற்கு பருவ மழை காரணமாக, கர்நாடக  அணைகளுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாயன்று காலை நிலவரப்படி, கபி னிக்கு 25 ஆயிரம் கன அடி  நீரும், கே.ஆர்.எஸ்.  அணைக்கு 48 ஆயிரம் கன  அடி நீரும் வந்துகொண்டி ருக்கிறது. இதையடுத்து, கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் விரைவில் நிரம்பவுள்ளதால், தமி ழகத்திற்கு திறந்துவிடப் படும் நீரின் அளவு சுமார்  23 ஆயிரம் கன அடியாக அதி கரிக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர், செவ்வாயன்று தமிழக எல்லையான பிலி குண்டுலுவை வந்தடைந் தது. தற்போது காவிரியில் நீர் வரத்து விநாடிக்கு 2500  கன அடியாக அதிகரித்துள் ளது. நீர்வரத்து அதிகரிப் பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளிலும் நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.  

மக்களவை தேர்தலில் தனித்தே போட்டி:  தேவகவுடா அறிவிப்பு

“வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சி 5, 6, 3, 2 அல்லது ஓர் இடத்தில் வெற்றி  பெற்றாலும், இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தனித்தே  போட்டியிடும். எங்கள் கட்சியினருடன் கலந்தாலோசித்த பின்னர் கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர் களை நிறுத்துவோம்” என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி யின் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவ கவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் ம.ஜ.த. - பாஜக கூட்டணியாக செயல்படும் என குமாரசாமி கூறியிருந்தார்.

கால்நடை மருத்துவம்:   இன்று தரவரிசைப் பட்டியல்!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ், கால்நடை மருத்துவம்  மற்றும் கால்நடை பராமரிப்பு, பி.டெக் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஜூன் 12 முதல் 30ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இந்நிலையில், சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல்,  புதனன்று காலை 10 மணிக்கு adm.tanuvas.ac.in, tanuvas.ac.in/ என்ற இணையதளங்களில் வெளியாகவுள்ளது. 

85 நாட்களுக்கு பிறகு நிபந்தனையுடன் இணைய சேவை!

மணிப்பூரில் கடந்த மே 3 அன்று வெடித்த வன்முறை, மேலும் பரவாமல் தடுக்கிறோம் என்ற  பெயரில், அங்கு இணையச் சேவை முடக்கப்பட்டது. இது வன்முறையையும், ஆளும் பாஜக  அரசின் நிர்வாக சீர்கேட்டையும் மூடிமறைக்கும் முயற்சி என அப்போதே கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இணைய சேவை வழங்க மணிப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் செல்போன்களுக்கான இணைய சேவை தடை தொடரும், அனைத்து ஐபி முகவரிகளும் தர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும், வன்முறை தொடர்பாக போலி தகவல்கள், வீடியோ பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்போது வரை 7 குற்றவாளிகள் மட்டுமே கைது!

பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றதுடன், கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய வழக்கில் ஹூய்ரேம் ஹெரோதாஸ் சிங் (32), யும்லெம்பம் நுங்சிதோய் மெட்டே (19) என 6 குற்றவாளிகளை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலை யில், திங்களன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை  14 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் பதினெட்டு வயதிற்கு குறைவான சிறுவன் என்று கூறப்படுகிறது.

சிறுபான்மையினர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்

சிறுபான்மையினர் சமூக, கல்வி, பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய வேண்டுமென்பது, பாரத் ராஷ்டிர சமிதி அரசின் நோக்கமாகும். ஆகவே, சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த, பாரசீக மதங்களைச் சேர்ந்த அனைத்து பிரிவினருக்கும் சிறுபான்மையினர் நல வாரியம் மூலம் குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு 100 சதவிகித மானியத்துடன் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

‘ஆகஸ்ட் 10-க்குப் பிறகு அஜித்பவார் முதல்வர்?’

“ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபா நாயகர் விரைவில் முடிவு எடுக்க இருக்கிறார். உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக விதித்த 90 நாள் கெடு முடிவடைய உள்ளது. ஆகஸ்ட் 10 வாக்கில், அனேகமாக ஏக்நாத் ஷிண்டே மற்றும்  அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்; அதனால் ஏக்நாத் ஷிண்டே தமது பதவியை பறிகொடுப்பார். அஜித்பவார் புதிய முதல்வராவார்” என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வ ரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரித்விராஜ் சவான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கர்நாடக ஆட்சியைக் கவிழ்க்க சிங்கப்பூரில் சதித் திட்டம்?

“பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் ஒப்பந்தம் செய்து கொள்ள இருக்கின்றன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூரு அல்லது தில்லியில் நடைபெறப் போவது  இல்லை. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிங்கப்பூர் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காக  சிங்கப்பூர் செல்ல விமான டிக்கெட்டுகளை புக் செய்து வைத்திருக்கின்றனர். எங்களுடைய எதிரிகள்  நண்பர்களாக ஒன்றிணைகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் நிலைமைகளை உன்னிப்பாக காங்கிரஸ் கட்சி கவனித்து வருகிறது” என்று, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார்.

மணிப்பூர் மக்களை ஏன் கட்டியணைக்க முடியவில்லை?

“பிரதமர் மோடி, அமெரிக்கா நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஆனால், நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் பேச மறுக்கிறார். பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை கட்டிப்பிடிக்கிறார். ஆனால் மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை கட்டிப்பிடிக்க மறுக்கிறார்”  என்று காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான கவுரவ் கோகோய் டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.

மணிப்பூர் பற்றிய விவாதம் அவசியமே! - மாயாவதி

“மணிப்பூரில் நிலைமை தீவிரமாகவும் கவலைக்கிடமாகவும் தொடர்வதால் அதன் பக்க விளைவுகளும் இயல்புதான். நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லாததால், நிலைமை மோசமாகி வருகிறது. அமைதியை மீட்டெடுக்கவும், மக்களை பாதுகாக்கவும், அவர்களின் காயங்களில் களிம்பு தடவுவதன் மூலம் அப்பகுதியில் வாழ்க்கையை இயல்பாக்குவதும் முக்கியம். எனவே, நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பற்றிய விவாதமும் அரசாங்க அறிக்கையும் அவசியம்” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

வேறு கட்சிகள் ஆண்டால் பாஜக விட்டு விடுமா?

“குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் மணிப்பூரில் உள்ள பாஜக ஆட்சியை அகற்ற  வேண்டியிருக்கும். அதனால்தான் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பாஜக  அமல்படுத்த மறுக்கிறதா? மணிப்பூரை வேறெந்த அரசியல் கட்சியும் ஆட்சி செய்தால் இதே நிலை தொடருமா?. மணிப்பூரில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா  தளம் அல்லது வேறு ஏதேனும் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்திருந்தால், பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசு, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தாதா?” என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சதா கேள்வி எழுப்பியுள்ளார்.

வரி வசூலில் தமிழ்நாடு, புதுவைக்கு 4 ஆம் இடம்

சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர், “கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில், தமிழ்நாடு,  புதுவையில் ரூ.1.08 லட்சம் கோடி அளவுக்கு வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்திய  ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 விழுக்காடு அதிகமாகும். இந்திய அளவில் வரி வசூல் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும், புதுச்சேரியும் நான்காம் இடத்தில் உள்ளது” என்று தெரிவித்தார்.

மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன்  கலந்தாய்வு: மாணவர்கள் பங்கேற்பு

சென்னை,ஜூலை 25- தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த வாரம் தரவரிசைப் பட்டியல் வெளி யிடப்பட்டது. இதையடுத்து அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தற்போது தொடங்கியுள்ளது. தரவரிசை பட்டியலில் 25,856 இடங்களை  பெற்ற மாணவர்கள் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டுள்ளனர். மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது சேர்க்கை மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்க லாம். ஜூலை 25 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை 7 நாள்கள் இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது.

உலகச் செய்திகள்

நீண்டநாட்களாகப் பல்வேறு நோய்களால் வாடிக் கொண்டிருக்கும்  மக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல சிரியா அரசு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியில் அரசு எதிர்ப்புக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு நல்ல சிகிச்சை தர சிரிய அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தென் கொரியாவில் தனது இரண்டாவது அணுஆயுதம் தாங்கிய  நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. எந்தவித மோதலும் இல்லாத ஆசிய-பசிபிக் மற்றும் கொரிய தீபகற்பப் பகுதிகளில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் தொடர்ந்து அமெரிக்கா முயற்சித்து வருகிறது. 

ஆப்பிரிக்காவின் மனிதவள உச்சிமாநாடு தான்சானியா நாட்டில் உள்ள துறைமுக நகரமான டர் எஸ் சலாமில் நடைபெற  உள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அந்நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கப் போகிறார்கள். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.