states

4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை,மே 24- தமிழ்நாட்டில் 4 நாட்களுக்குக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வெப்பச்சலனம் காரணமாக மே 25 முதல் 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய க்கூடும். மே 27 முதல் 28 வரைக்கும் தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழ்நாடு கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 465 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.