states

டொமினிக் மார்ட்டின் வீட்டில் சோதனை!

ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்

களமசேரி குண்டுவெடிப்பை தானே நடத்தியதாக முகநூலில் பேசிவிட்டு, கொடகரை காவல் நிலையத்தில் சரணடைந்த டொமினிக் மார்டின் குடியிருந்த வீட்டில் விசாரணை அதிகாரிகள் ஞாயிறன்று மாலை சோதனை நடத்தினர். அங்கிருந்து அவரது ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

நெடுவாசலில் உள்ள சொந்த வீட்டில் பராமரிப்புப் பணி கள் நடைபெறுவதன் கார ணமாக, டொமினிக் மார்டின், கடந்த  ஐந்தரை ஆண்டுகளாக தம்மானம்  குத்தப்பாடி காதர்பிள்ளை சாலை யிலுள்ள மாடி வீட்டில் வாடகைக்கு  வசித்து வந்துள்ளார். அவரும் அவ ருடைய மனைவியும் 25 வருடங்க ளாக யெகோவா நம்பிக்கையாளர் களாக இருந்துள்ளனர். இவர்க ளுக்கு இரண்டு குழந்தைகள். டொமினிக் மார்டின் 18 ஆண்டு களாக துபாயில் கட்டுமான நிறு வனத்தில் போர்மேனாக இருந்துள்  ளார். பின்னர், வீடுகள் கட்டி விற்  பனை செய்யும் தொழில்நடத்து வதற்கு நாடு திரும்பியுள்ளார். தம்  மானத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டிட்யூட்டையும் நடத்தி வந்துள்ளார். இரண்டு ஆண்டு களுக்கு முன்பு கொரோனா காலத்  தில் மீண்டும் துபாய் சென்ற மார்  டின், கடந்த ஒன்றரை மாதங்க ளுக்கு முன்பு, மகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் நாட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். இந்நிலையில்தான், ஞாயி றன்று அதிகாலை 5.30 மணியள வில் தனது வீட்டில் இருந்து வெளி யேறியுள்ளார். குண்டுவெடிப்புக் குப் பிறகு அவர் தனது மனைவிக்கு தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ‘நான்தான் குண்டை வெடிக்கச் செய்தேன். உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது’ என்று அந்த செய்தியில்  குறிப்பிட்டுள்ளார். இதனை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர், டொமினிக் மார்ட்டின்  முகநூல் நேரலை மூலம் களமசேரி யில் நடந்த குண்டுவெடிப்பு, ‘தவ றான சிந்தனைக்கான எதிர்வினை’ என்றும் ‘யெகோவாவின் சாட்சி கள்’ இயக்கத்தில் 16 ஆண்டுகள் செயல்பட்டதாகவும் தெரிவித்தார். அது தவறான, தேசத்துரோக இயக்  கம் என்று பின்னர் உணர்ந்து கொண்  டதாகவும் குறிப்பிட்டார். தவறான வற்றை சரி செய்யுமாறு கேட்டுக்  கொண்டும், அதற்கு அவர்கள் தயா ராக இல்லை. இந்த இயக்கம் நாட் டிற்கு ஆபத்து என்பதை உணர்ந்த பின்னரே எதிர்வினையாற்றும் எண்ணம் வந்தது. வெடிகுண்டின் பார்முலாவை ஒளிபரப்பக் கூடாது  என்றும், அது சாமானியர் கைக ளுக்குச் சென்றால் ஆபத்தானது என்றும் மார்ட்டின் அந்த நேரலை யில் கூறியுள்ளார்.  

அதைத்தொடர்ந்தே அவர்  கொடகரை காவல் நிலையத் துக்கு வந்து சரண் அடைந்தார்.  விசாரணையில், டொமினிக் கூட்டம் நடந்த மையத்துக்கு ஞாயிறன்று காலை 7 மணிக்கு ஸ்கூட்டரில் வந்  துள்ளார். வெடிகுண்டுடன் பெட்  ரோலும் வைத்திருந்ததாக கூறப்  படுகிறது. முன்னதாக வெடிகுண்டு  தயாரிப்பது எப்படி என்பதை இணையத்தில் பார்த்து கற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அவ ரது செல்போனில் இருந்து வெடி குண்டு தயாரிக்கும் பல்வேறு வீடி யோக்களும் கிடைத்துள்ளன. இந்நிலையில்தான் அரங்கினுள் ஆட்கள் இல்லாத நிலையில் 3 இடங்களில் நாற்காலிகளின் கீழ் வெடிகுண்டுகளை வைத்துள்ளார். கூட்டம் தொடங்கியதும் ரிமோட்  கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டு களை வெடிக்கச் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். களமச்சேரி குண்டுவெடிப்பு: பலி 3 ஆனது களமச்சேரி குண்டுவெடிப்பு  சம்பவத்தில் பலி 3 ஆகியுள்ள நிலை யில்  தற்போது 17 பேர் பல்வேறு  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கேரள சுகாதா ரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். “உயிரிழந்த 12 வயது லிபினா வின் தாய் மற்றும் சகோதரரின் நிலைமை கவலைக்கிடமாக உள் ளது. மருத்துவ நிபுணர்களின் உயர்  சிகிச்சையை உறுதி செய்ய 14 பேர்  கொண்ட மருத்துவக்குழு அமைக் கப்பட்டுள்ளது. இக்குழுவில் சுகா தாரத் துறை இயக்குநர், கோட்ட யம், திருச்சூர், களமசேரி மருத்து வக் கல்லூரிகள் மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் உள்ளனர்.”