states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வேலையின்மை, விலைவாசி உயர்வை திசைத்திருப்பும் பாஜக!

“காஷ்மீர் மாநிலம், மக்களின் விருப்பத்துக்கு மாறாக, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தேர்தல் நடத்தாததால், மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசு இல்லை. அந்த வகையில், காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒன்றிய அரசு பறித்துவிட்டது. அத்துடன், வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற உண்மை யான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஆக்கிமிரப்பு அகற்றும் நட வடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. காஷ்மீர் மக்களின் வேதனையை நான் உணர்ந்துள்ளேன்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார்.

திப்பு சுல்தான், பாகிஸ்தான் விவகாரங்களே பாஜகவின் ஆக்சிஜன்!

“எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் திப்பு சுல்தான் மற்றும் வி.டி. சாவர்க்கர் இடை யிலானது என்று பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல் கூறியது ஆச்சரிய மளிக்கவில்லை. தேர்தல் நேரங்களில், திப்பு சுல்தான், பாகிஸ்தான் மற்றும் தலிபான் விவகா ரங்கள் பாஜகவுக்கு ஆக்சிஜன் போன்றது. அவர்கள் அதிலிருந்து அரசியல் லாபம் பெறுகிறார்கள்.  அவர்களின் (பா.ஜ.க.) அரசியல் உயிரோட்டமே அதில்தான் அடங்கியிருக்கிறது” கர்நாடக சட்டப்பேர வையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான யு.டி. காதர் சாடியுள்ளார்.

சிவசேனாவை கைப்பற்றுவதற்கு ரூ.2000 கோடி கைமாறியுள்ளது

‘‘சிவசேனா கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பெறுவதற்காக, ஆறு மாதங்களில் இது வரை 2000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் செய்யப்  பட்டுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பெரும் குழப்பங்களுக்கு மத்தியில், கடந்த ஆண்டு கட்சி யில் இருந்து விலகிய 40 எம்எல்ஏக்களுக்கு தலா 50 கோடி என 2 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது.  இது ஆரம்பப் புள்ளியாகும், இது 100 சதவிகித உண்மை. விரைவில் பல உண்மைகள் வெளி வரும். அரை நீதித்துறை அதிகாரங்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பு (தேர்தல் ஆணையம்) பாரபட்சமற்றதாக மட்டும் இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தேர்தல் ஆணையம் அவ்வாறு செயல்படவில்லை” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் காட்டமாக கூறியுள்ளார்.

நாங்கள் புதிய ஏகலைவர்கள்... கட்டை விரலை இழக்க மாட்டோம்...

“பீகாரில் ஆர்ஜேடி அரசாங்கத்தில் இருக்கும்போதோ அல்லது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்போதோ சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும் அபாயம் உள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆர்ஜேடி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கருதப்படுகிறது. மோசமான ஆட்சி  ஆர்ஜேடி கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்” என்று தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர்  குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அமைச்சர் சந்திரசேகர் பதிலளித்துள்ளார். அதில், “நாங்கள் ஏகலைவர்கள், நாங்கள் இனி கட்டைவிரலை வழங்கப் போவதில்லை, தேவைப்பட்டால் மற்ற வர்களின் கட்டைவிரலை எடுக்க முடியும்” என்று, கிஷோரின் பிராமணிய மனோபாவத்தை குறிப்  பிட்டு சாடியுள்ளார்.

தில்லியிலுள்ள ஓவைசி வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசிக்கு, தில்லி அசோகா சாலையில் வீடு உள்ளது. இந்த வீடு மீது ஞாயிறன்று மாலை  5.30 மணியளவில் கல்வீச்சு நடந்துள்ளது.  இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேத மடைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஓவைசி, நாடாளுமன்ற வீதியிலுள்ள காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். 2014-ஆம் ஆண்டில் இருந்து, தன் வீட்டின் மீது இதுவரை 4 முறை இதுபோன்று கல்வீச்சு நடந்திருப்பதாக ஒவைசி தெரிவித்துள்ளார்.

நாத்திகர்கள் அழிந்துபோக, பாஜக எம்.பி. சுரேஷ்கோபி ‘பிரார்த்தனை’

“கடவுளை நம்புபவர்களை நான் நேசிக்கிறேன். ஆனால், இந்த உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை நான் நேசிக்க மாட்டேன். மத வழிபாடுகள், மத நிறுவனங்களை இழிவு படுத்தும் யாரும் இவ்வுலகில் எந்த சூழலிலும் அமைதியான நல்ல வாழ்க்கையை வாழ்ந்தது இல்லை. நான் மத நம்பிக்கை அற்றவர்களின் அழிவை வேண்டி கோயிலில் பிரார்த்தனை செய்ய  உள்ளேன். அனைவரும் இதை செய்யுங்கள்” என்று பாஜக-வைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.யும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி கேரளத்தின் ஆலுவா என்ற இடத்தில் நடை பெற்ற சிவராத்திரி விழாவில் பேசியுள்ளார்.

குப்தர்கள் காலம் போன்று மோடியின் காலமும் பொற்காலமாம்...

‘நமது வரலாறு பாடத்தில் சந்திரகுப்தரின் பொற்கால ஆட்சி குறித்து நாம் படித்து இருக்கி றோம். இன்றும் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் உள்ளது. இதைப்போல அடுத்த தலைமுறைகள், 3-வது, 4-வது தலைமுறைகள் பிரதமர் மோடியின் பொற்காலம் குறித்து படிப்பார்கள். அவர்கள் இந்திய வரலாறு படிக்கும்போது இது கற்பிக்கப்படும்’ என்று ஒன்றிய அரசின்  சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா பேசியுள்ளார். 

கொரோனாவுக்கு பின் புற்றுநோய் அதிகரிப்பா? ராம்தேவ் சலம்பல்

“புற்றுநோய் மிகவும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிறகு நாட்டில்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் கண் பார்வை, செவித்திறன் ஆகியவற்றை இழந்துள்ளனர்” என்று கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் பர பரப்பை கிளப்பியுள்ளார். “சுற்றுலாப் பயணிகள் கோவாவை சுற்றிப்பார்க்க மட்டும் வராமல், ரத்த  அழுத்தம், தைராய்டு, புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சை பெற வேண்டும். யோகா,  ஆயுர்வேதம், சனாதன் மற்றும் ஆன்மீகத்திற்கான சுற்றுலா மையமாக கோவா மாற வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கடலில் மூழ்கி 3 பேர் பலி

இராமநாதபுரம், பிப்.20- இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்ட ணத்தில் படகில் சுற்றிப்பார்க்க சென்ற  மதுரையைச் சேர்ந்த 3 பேர் கடலில் மூழ்கி னர். இரண்டு பெண்கள் உடல்கள் மீட்கப்  பட்ட நிலையில் மற்றொருவர் உடலை தேடுகின்றனர்.  மதுரை சோலை அழகுபுரம், சந்தை பேட்டையை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட வர்கள் கமுதி அருகே  பாக்குவெட்டி கிரா மத்தில் உள்ள அய்யனார் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தனர். திங்களன்று இராமநாதபுரம் அடுத்துள்ள தேவிபட்ட ணம் பகுதியில் உலகம்மாள் கோயி லுக்கு சாமி தரிசனம் செய்து விட்டு பட கில் கடலை சுற்றிபார்க்க சென்றுள்ள னர். இதில், ஒரு படகில் 5 சிறார்கள்  உட்பட 15 பேருடன் படகில் சென்றுள்ள னர். இதில், கடல் அலைச்சீற்றம் கார ணமாக படகு ஒரு பக்கமாக சாய்ந்தது. இதில், படகில் ஓரத்தில் இருந்த மணி மேகலை(50) ,  இருளாயி ஆகிய இரண்டு  பேரும் தவறி கடலுக்குள் விழுந்தனர்.  இவர்களை காப்பாற்ற கடலுக்குள் குதித்த முத்துமணி (35)  ஆகிய மூன்று பேரும் கடலுக்குள் மூழ்கினர். இதில், மணிமேகலை, இருளாயி உடல்களை சக மீனவர்கள் உதவியுடன் மீட்டனர்.  முத்துமணியை தேடிவருகின்றனர்.

ஆற்றில் மூழ்கி சிறுமிகள் பலி

தஞ்சாவூர், பிப்.20 -  தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஒன்பதுவேலி காமராஜர் காலனியை சேர்ந்த திரு நாவுக்கரசு மகள் பிரித்திகா (14), அதே பகுதியில் உள்ள  தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன் மகள் குணசுந்தரி (16), 10-ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.   தோழிகளான இருவரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் குடமுருட்டி ஆற்றின் கரையில், ஆடு மேய்க்கச் சென்றனர். அப்போது, இருவரும் ஆற்றில் குளிக்க முயன்ற போது, பள்ளத்தில் சிக்கி, எதிர்பாராத விதமாக தண்ணீ ரில் மூழ்கினர். இந்நிலையில், ஆற்றுக்கு சென்ற இருவரும் வெகு நேரமாக வீட்டுக்கு திரும்பாததால், அவர்களது பெற்றோர், உறவினர்கள் தேடி சென்ற போது, குடமுருட்டி  ஆற்று நீரில் மூழ்கிய நிலையில் இருந்தனர்.   இதையடுத்து அவர்களை மீட்ட உறவினர்கள், திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பிலிபட்டி ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி கள் சோபியா, தமிழரசி, இனியா, லாவண்யா ஆகியோர்  பிப்.15 அன்று மாயனூர் காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மேலும் 2 சிறுமிகள் உயி ரிழந்துள்ளனர்.

ஏடிஎம் கொள்ளையர்களை காவலில் விசாரிக்க தனிப்படை முடிவு

திருவண்ணாமலை,பிப்.20- திருவண்ணாமலையில் கடந்த 12 ஆம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடைபெற்றது. இதில் ரூ.73 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் தலைவர் முகமது ஆரிப், ஆசாத்  ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதம் ரூ.70 லட்சத்தின் நிலை குறித்து தெரியவில்லை. ஏடிஎம்  கொள்ளையில் ஈடுபட்ட மேலும் 3  பேரின் அடையாளம் தெரிந்துள்ள தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைப் பிடிக்க, ஹரியாணா மாநிலத்தில் தனிப் படையினர் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையில் ஹரியானா மாநிலத்தில், ராஜஸ்தான் கொள்ளை யர்கள் 2 பேர் ஜீப்புடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதால், திரு வண்ணாமலை ஏடிஎம் கொள்ளை யர்களைப் பிடிக்கும் தனிப்படையின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது  ஆரிப், ஆசாத் ஆகியோரை 7 நாள்  காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை யினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். 

முதலமைச்சர்  2 நாள் பயணமாக திருவாரூர் செல்கிறார்

சென்னை,பிப்.20-  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24 ஆம் தேதி பிரச்சாரம் மேற் கொள்கிறார். இதற்கிடையே, 2 நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு பிப்.21 அன்று செல்கிறார். பிப். 22 அன்று மன்னார்குடியில் நடைபெறும் மாவட்ட  ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார்.  அங்கிருந்து கார் மூலம்  திருவாரூருக்கு செல்கிறார். தலையா மங்கலம் பாலு இல்ல திருமணத்தை நடத்தி வைக்கும் முதலமைச்சர், திருவாரூர் மாவட்டம், காட்டூரில் கட்டப் பட்டு வரும் கலைஞர் அருங்காட்சிய கம், மணிமண்டபம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்கிறார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்  கொண்டு அவர் மீண்டும் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை வருகிறார். இதற்கிடையில், தஞ்சாவூர் செல்லும் முதல்வர், முன்னாள் அமைச்சர் உபயதுல்லாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.

அனுமதியின்றி  கிளி வளர்ப்பு:  ரோபோ சங்கருக்கு  ரூ.2.5 லட்சம் அபராதம்

சென்னை,பிப்.20- அனுமதியின்றி வீட்டில் அலெக்சாண்டரியன் வகை கிளிகளை வளர்த்த ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில்  நகைச்சுவை கலைஞராக அடையா ளம் பெற்றவர் ரோபோ சங்கர். இவர் தன் குடும்பத்துடன் சாலிகி ராமத்திலுள்ள வீட்டில் வசித்து  வருகிறார். பல்வேறு செல்லப்பிராணி களை வளர்த்து வரும் ரோபோசங்கர்,  பறவைகளையும் வளர்த்து வருகிறார்.  யூடியூப் சேனல் ஒன்றில் அவரது வீட்டில் வளர்க்கப்படும் அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளின் வீடியோ ஒன்று வெளியானது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட வனத்துறை அதிகாரி கள் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வரும் கிளிகளை பறிமுதல் செய்து  கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைந்த னர். இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக  கிளைகளை வளர்த்ததன் காரணமாக  ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ள னர்.

மயில்சாமி உடல் தகனம்

சென்னை,பிப்.20- சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நகைச்சுவை திரைக் கலைஞர் மயில்சாமி, சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள கோயிலுக்கு சென் றார். டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அங்கு நடந்தது. இதில்  பங்கேற்ற மயில்சாமி, கோயிலி லிருந்து அதிகாலை 3 மணிக்கு வீடு  திரும்பினார். அதன்பிறகு அவருக்கு  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக போரூரில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. அவரது உடலுக்கு திரை யுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து திங்களன்று (பிப்.20) காலை அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. இதனைத் தொடர்ந்து வடபழனியிலுள்ள மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

‘நெட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை,பிப்.20- பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்கும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான ஒன்றிய அரசு  வழங்கக்கூடிய உதவித் தொகையை பெறுவதற்கும் ‘நெட்’ தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி  பெறுபவர்களே உதவி பேராசிரியர் களாக சேரவும், ஒன்றிய அரசின் உதவித்  தொகையை பெறவும் முடியும். அந்த வகையில் இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் 2 முறை கணினி  வாயிலான தேர்வு நடத்துகிறது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதத்துக் கான நெட் தேர்வு பிப்.21 தொடங்கி மார்ச் 10 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வில் முதல்கட்டமாக நடத்தப்பட உள்ள 57 பாடங்களின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. தேர்வர்கள் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மீதம் உள்ள பாடங்களுக்கான தேர்வுக்கால அட்டவணை, ஹால்டிக் கெட் குறித்த விவரங்கள் விரைவில்  வெளியிடப்படப்படும் என்றும், கூடுதல் விவரங்களை இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும்  தேசிய தேர்வு முகமை தெரிவித் துள்ளது.

கபடி பயிற்சியாளர் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி

சென்னை,பிப்.20- மாரடைப்பால் உயிரிழந்த கபடி பயிற்சியாளர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப் படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “குளித்தலை குறு வட்டம், சத்தியமங்கலம் கிராமம் கணக்குப் பிள்ளையூரில் சிறுவர்க ளுக்கிடையேயான கபடி போட்டி  விளையாட்டுக்கு வந்திருந்த சிறுவர்களை அழைத்து வந்த  திண்டுக்கல் மாவட்டம், வேட சந்தூர் வட்டம், பாளையம் அஞ்சல்  கரிச்சிகாரன்பட்டியைச் சேர்ந்த பயிற்சியாளர் மாணிக்கம் (26)  சிறிது நெஞ்சு வலி இருந்தும் தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி அதிகமான இருந்த தால் அவரை அய்யர்மலை தனியார்  மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பிறகு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியி லேயே உயிரிழந்தார் என்ற செய்தி யினைக் கேட்டு மிகுந்த வேதனை யடைந்தேன். உயிரிழந்த கபடி விளையாட்டு பயிற்சியாளரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தல்களையும் தெரிவித்துக் கொள்வ தோடு உயிரிழந்தவரின் குடும்பத் தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தர விட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

‘‘அடக்குமுறையைக் கைவிடுக!’’

வியன்னா, பிப்.20- துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஒற்றுமை மையத்திற்குள் நுழையும்போது அவர்களைக் காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குழுமும் பல இடங்களில் காவல்துறையினர் நுழைந்து சோதனை என்ற பெயரில் தொல்லைகள் தந்து கொண்டிருக்கிறார்கள். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை முறையாக செய்யாததை மறைக்கவே துருக்கி நிர்வாகம் இந்த வேலைகளில் இறங்கியுள்ளது என்று ஆஸ்திரியாவின் தொழிலாளர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நிவாரணப் பணிகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அதைக்குலைக்கவே இந்தக் காவல்துறை சோதனை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. துருக்கி அரசைக் குற்றம் சாட்டியுள்ள மேலும் சில கம்யூனிஸ்ட் கட்சிகள், துருக்கி மக்களுக்கும், துருக்கி கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டுமாறு தங்கள் நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தையும், இளைஞர்களையும் கேட்டுக் கொண்டுள்ளன. துயரம் ஏற்பட்டுள்ள வேளையிலும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் துருக்கி அரசை வலியுறுத்தியிருக்கிறார்கள்.