நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் அதிமுக தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. புதுக்சேரியை தொகுதியை என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பாஜகவுக்கு தாரைவார்த்துவிட்டார். பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தபோது அதிமுக தலைவர்களும் முன்னாள் முதல்வர்களு மான எம்ஜிஆர். ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி னார். இந்நிலையில் புதுச்சேரி பாஜக, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் வாக்கு கேட்டு போஸ்டர் களை ஒட்டியுள்ளது. எம்ஜிஆர் போல் அமைச்சர் நமச்சிவாயத்தை சித்தரித்து இணையத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். பாஜகவின் மோடி மற்றும் அகில இந்திய,மாநிலத் தலைவர்களை நம்பிப் பயனில்லை என்று கருதி, ஓட்டுகளுக்காக மற்ற கட்சித் தலைவர்களின் படங்களை பாஜகவினர் பயன்படுத்தத் தொடங்கி யுள்ளனர் என்று மற்ற கட்சியினரும் அரசியல் நோக்கர்களும் விமர்சிக்கின்றனர். இதுகுறித்து அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் கூறுகையில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட யாரும் முன்வர வில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லாத சூழ்நிலையில் எங்கள் மறைந்த தலைவர்களான எம்ஜி ஆர், ஜெயலலிதா படங்களை போஸ்டரில் பிரசுரித்து, வாக்களியுங்கள் என புதுச்சேரி பாஜகவினர் விளம்பரம் செய்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத தாகும். மலிவு விளம்பரம் தேடுவதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சாடினார்.