புதுதில்லி, ஜூலை 29- ஆளும் பாஜக உறுப்பினர்கள் இரண்டா வது நாளாக மேற்கொண்ட அமளி காரண மாக, நாடாளுமன்றத்தின் இரு அவை களும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்னி’ என அவமதிப்பு செய்யப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக எம்.பி.க்கள் வியாழனன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கின.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று வழக்கம்போல அவை நடவடிக்கைகள் துவங்கிய நிலையில், பாஜக-வினர் மீண்டும் ‘ராஷ்டிரபத்னி’ விவகாரத்தைக் கிளப்பி, சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டு மென முழக்கமிட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க் கட்சிகள், விலைவாசி உயர்வு, அரிசி, கோதுமை, தயிருக்கான ஜிஎஸ்டி, அக்னி பாதை விவகாரம், பணவீக்கம் குறித்த பிரச்ச னைகளை பின்னுக்குத் தள்ளவே, பாஜக-வினர் ‘ராஷ்டிரபத்னி’ விவகாரத்தை கிளப்பு வதாக குறிப்பிட்டு, மோடி அரசுக்கு எதிராக பதில் முழக்கம் எழுப்பினர்.
இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது சபாநாயகர் இருக்கை யில் அமர்ந்திருந்த கீர்த்தி சோலங்கி உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு பலமுறை கேட்டுக் கொண்டார். எனினும் அமளி குறையாததால், 12 மணி வரை அவை யை ஒத்திவைத்தார். 12 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் அமளி குறை யாததால், பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்ட மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, குஜராத் கள்ளச் சாராய உயிரிழப்பு உள்ளிட்ட பிரச்சனை களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆனால், இங்கும் ‘ராஷ்டிரபத்னி’ விவ காரத்தையே பாஜக-வினர் முன்வைத்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் இங்கும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட அவை, பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும், ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.
3-ஆவது நாளாக தர்ணாவைத் தொடர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
இதனிடையே இடைநீக்கம் செய்யப் பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த 27 எம்.பி.க்கள் தங்களது இடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி நாடாளு மன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு பகலும், இரவுமாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையன்றும் தொடர்ந்தது. முன்னதாக, வியாழக்கிழமை கனமழை பெய்த நிலையில், தற்காலிக கூடாரம் அமைக்க அனுமதி வழங்கப்படாததால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலுக்கு தங்களது போராட்டக் களத்தை மாற்றினர். வெள்ளியன்று பகலில் மீண்டும் காந்தி சிலை முன்பாக போராட்டத்தைத் தொடர்ந்தனர்.