ஒன்றிய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல்; தொகுதி மறுவரையறை ஆகிய திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேர வையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானங்கள் கொண்டு வந்தார். இந்த தீர்மானங்கள் மீதான விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “தென் மாநிலங்கள் பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதத்தில் ஒரு சிறப்பான இடத்தை அடைந்துள்ளது. வருங்காலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் போது நமக்கான குரல் மக்களவையில் இருப் பதற்கான வாய்ப்பு மறுக்கப்படும் என்ற அச்சம் நியாயமானது. பாஜகவை பொறுத்தவரை இந்த தீர்மானத்தின் மீதான கவலையை, அக்கறையை புரிந்துகொள்கிறது. நிச்சயமாக எந்த இடத்தில் என்ன நடவடிக்கை வேண்டுமோ, தமிழ்நாடு பாஜக முழு மையாக அந்த தீர்மானத்தை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கும்” என்றார். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “தீர்மானத்தை ஆதரிக்கிறீர்கள், அப்படித்தானே” என்றார். அதற்கு பதிலளித்த வானதி, “ஆதரிக்கிறோம் என்ற வார்த்தை பேரவைத் தலைவருக்கு வேண்டும்” என்று கூற அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய வானதி, “தீர்மானத்தின் கவலையை புரிந்து கொள்கிறோம். இதில் அக்கறை எடுத்துக் கொள்கிறோம். வேண்டிய இடத்தில் நாங்கள் பேசுகிறோம் என்றார். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை சீர்திருத்தமாக பார்க்க வேண்டுமே தவிர யாரோ ஒருவர் ஆட்சி வருவதற்கு நடத்தப்படும் தேர்தல் கிடையாது. அது தேவையில்லாத பயம். தேவை யில்லாத பயத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் வருவதாக நாங்கள் நினைக்கிறோம். எனவே இந்த தீர்மானம் அவசியமற்றது என தெரிவித் துக் கொள்கிறோம் என்று கூறினார். அதிமுக கள்ள மவுனம் ஏன்? “தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தனித் தீர்மானத்தை அதிமுக ஆதரிப்ப தாக அருண்மொழி தேவன் தெரிவித்தார். ஆனால், ஒன்றிய பாஜக அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் குறித்து பேசிய அதிமுக மூத்த உறுப்பினர் தளவாய் சுந்தரம்,“எங்களது கட்சியின் சார்பில் ஒன்றிய பாஜகவுக்கு 10 கோரிக்கைகளை முன்வைத்துள் ளோம். அதை நிறைவேற்றினால், நிபந்த னைகளுடன் ஆதரவு தெரிவிப்போம் என்றார். ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானம் குறித்து எதுவும் சொல்லாமல் தனது உரையை முடித்துக் கொண்டார்.