பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-. இது முக்கியமான கால கட்டம். நாடாளு மன்ற தேர்தல் நெருங்கி கொண்டு உள்ளது. யாரும் மெத்தனமாக இருக்கக் கூடாது. 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு இது தான் அடித்தளம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்யும் பாஜக. எந்த கீழ்த்தர மான அரசியலுக்கும் போவாங்க. மதத்தை, ஆன்மிக உணர்வை தூண்டி அரசியல் செய்ய பார்க்கிறது பாஜக. அரசி யலையும், ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள் என்பதால்தான் தமிழ்நாட்டில் மூச்சு திணறுகிறது பாஜக. திமுகவை எதிர்ப்பதை விட அதிமுக விற்கு எந்த காலத்திலும் வேறு கொள்கை இல்லை. அதனால்தான் இன்று உணர்ச்சி இழந்து கிடக்கிறது. சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியாத பாஜகவும், சரிந்தும் சிதைந்தும் கிடக்கும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பொய் பரப்புரைகளை கட்ட விழ்த்து விடுவார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியை இப்போதே துவங்க வேண்டும். அடுத்த இரண்டு மாதத்திற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும்.” இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.