மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் யூடியூப்-பில் இருந்து நீக்கம்!
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிபிசி தொலைக்காட்சியில், செவ்வாய்க்கிழமை ‘’இந்தியா: மோடி மீதான கேள்வி’’ (பகுதி 1) என்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. இது யூடியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், பலரும் அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். 2002 குஜராத் வன்முறை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, நரேந்திர மோடி தலைமையிலான அன்றைய குஜராத்தில் முஸ்லிம்களின் நிலை குறித்தும் ஆவணப்படத்தில் விளக்கப்பட்டு இருந்தது. இந்த ஆவணப்படத்தை மூத்த வழக்கறிஞர் பிர ஷாந்த் பூஷண், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தனர். இதேபோல பொதுமக்களும் பலர், அந்த வீடியோவைப் பார்வையிட்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். இந்நிலையில், தற்போது மோடி குறித்த பிபிசியின் ஆவ ணப்படம் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
ஜம்மு -காஷ்மீரில் வியாழனன்று 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி பிற்பகல் 12:04 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால், உயிர்ச் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜனவரி மாதத்திலேயே கடந்த 8 ஆம் தேதியும், இரவு 11.15 மணியளவில் ஜம்மு -காஷ்மீரில் உள்ள கிஷ்த்வாரில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராமர் பாலம் வழக்கு முடித்து வைப்பு
ராமர் பாலம் எனப்படும் மணல் திட்டை, தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறி விக்கக் கோரி, பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் முடித்துவைக்கப்பட்டது. ராமர் சேது பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறி விப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறிய நிலையில், சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம், அரசின் முடிவு திருப்தி அளிக்காவிட்டால், மீண்டும் வழக்கு தொடரலாம் என்று தெரிவித்துள்ளது.
‘நேரு போல விவசாயிகளுக்கு உதவ விரும்புகிறேன்’
“முன்னாள் பிரதமர் நேருவை போலவே, நானும் ஒரு இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், பங்களா மற்றும் பிற ஊதியங்களை மறுத்து, சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உதவ விரும்புகிறேன்” என்று பாஜக எம்.பி.யும், ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனுமான வருண் காந்தி பேசியுள்ளார்.
விலைபோன எம்எல்ஏக்களை என்னவென்று அழைப்பது?
“விஜயநகர (ஹோஸ்பேட்) தொகுதியின் பிரதிநிதியாக காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்த் சிங் ஒரு வருடத்தில் பாஜக-வில் இணைந்தார். தங்களின் வாழ்க்கைப் பாட்டிற்காக, உடலை விற்கும் பெண்களை நாம் விலைமாதர்கள் என்று அழைக்கிறோம். அப்படியானால், பணத்திற்காக தங்களை விற்றுக் கொண்ட ஆனந்த் சிங் போன்ற எம்எல்ஏ-க்களை நீங்கள் என்னவென்று அழைப்பது? சுயமரியாதை உள்பட அனைத்தையும் விற்ற உள்ளூரூ எம்எல்ஏ-ஆனந்த் சிங்-கிற்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்” என்று கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவர் பி.கே. ஹரிபிரசாத் பேசியுள்ளார்.
ராகுல் அன்பு, அமைதியின் செய்தியைக் கொண்டு வருகிறார்...
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம், ஜம்மு - காஷ்மீருக்கு சென்றுள்ள நிலை யில், “நாடு வெறுப்புணர்ச்சியால் தூண்டப்படும் நேரத்தில், ராகுல் காந்தி அன்பு மற்றும் அமைதியின் செய்தியை கொண்டு வருகிறார். இந்த காயங்களை குணப்படுத்த அவர் எடுக்கும் முயற்சிகளை வரவேற்கிறோம்” என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், ராகுல் காந்தியை காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைவதை வரவேற்கும் வகையில், ஜம்முவில், விமான நிலை யத்திற்கு வெளியே, ஒரு பெரிய விளம்பர பலகையையும் மெகபூபா கட்சியினர் வைத்துள்ளனர்.
25 வயதில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியான தலித் பெண்
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு ஆன்லைன் மூலமாக நேரடி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காரு பேட்டையைச் சேர்ந்த காயத்ரி (25) தேர்ச்சி பெற்றுள்ளார். விரைவில் அவர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் சிவில் நீதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார். அரசுப் பள்ளியில் படித்து, கெங்கல் அனு மந்தையா சட்ட கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து, பல்கலைக்கழக அளவில் நான்காவது இடம் பிடித்த காயத்ரி தற்போது மிகக்குறைந்த வயதில் உயர் நீதிமன்ற சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.