சென்னை, செப்.27- ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அவரின் தலை யீடு தேவையற்ற குழப்பங் களை ஏற்படுத்தும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாசு தெரிவித்திருக் கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், சென்னை பல்கலைக் கழகத்திற்கு புதிய துணை வேந்தரை அடையாளம் காண்பதற்காக தமிழ்நாடு அரசால் கடந்த வாரம் அறி விக்கப்பட்ட தேடல் குழுவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேடல் குழு அமைப்ப தில் ஆளுநருக்கு எந்த அதி காரமும் இல்லாத நிலையில், ஆளுநரின் இந்த தலையீடு தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். சென்னை பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சென்னை பல் கலைக்கழக சட்டத்திற்கு உட்பட்டு தான் அமைய வேண்டும். அதன்படி தான் மூவர் கொண்ட தேடல் குழுவை அமைத்து தமிழ் நாடு அரசின் உயர்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டி ருக்கிறது. அரசின் அறிவிக்கையை திரும்பப் பெறும் படி ஆளு நரால் கோர முடியாது. தமிழ் நாட்டின் ஆளுநர் என்பவர் தேடல் குழுவால் பரிந்துரைக் கப்படும் 3 பேர் கொண்ட பட்டி யலில் இருந்து ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக் கும் அதிகாரம் மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது தவிர, தேடல் குழுவை அமை ப்பதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை. முறை யற்ற செயல் என்று கூறுவ தற்கு ஆளுநர் மாளிகைக்கு எந்த அதிகாரமும் கிடை யாது” என்று கூறியுள்ளார்.