states

img

தஞ்சாவூரில் கரும்பு விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல்; அராஜகம்!

தஞ்சாவூர், செப். 26 - தஞ்சாவூர் ஆட்சியர் அலுவல கம் முன்பு காத்திருப்பு போராட்டம் அறிவித்திருந்த கரும்பு விவசாயி களை, வரும் வழியிலேயே தடுத்து  நிறுத்தியும், ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடியவர்களை பலப்பிர யோகம் செய்து, தாக்கியும், இழுத்துச் சென்றும் கைது செய்து, காவல்துறை அராஜகம் நடத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட விவசாயி களை வேனிற்குள் வைத்தும் தாக்கி யுள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங் குடி திரு ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்கு கரும்புக் கான பாக்கித் தொகையை தரவில்லை.  மாறாக, விவசாயிகளின் பெயரில் வங்கி களில் ரூ. 200 கோடி ரூபாய் அள விற்கு கடன் மோசடி செய்ததுடன், விவ சாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடனுக்கு, பிடித்தம் செய்த பணத்தை யும் உரிய முறையில் வங்கிகளுக்கு செலுத்தாமல் ஏமாற்றி விட்டது. இதையடுத்து, தங்களுக்கான பாக்கித் தொகையை 15 சதவிகித வட்டி யுடன் வழங்க வேண்டும்; கரும்பு விவ சாயிகளின் பெயரில் ஆரூரான் ஆலை  நிர்வாகம் வங்கியில் பெற்ற 136 கோடி ரூபாய் கடனை முழுமையாக தள்ளு படி செய்ய வேண்டும்; வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன் பிரச்சனையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து, பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் தலைமையில் போராட் டங்களைத் தொடர்ந்து வருகின்றனர். திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகள் போராட் டம் கடந்த 2022 நவம்பர் 30 அன்று துவங்கி தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில், செவ்வாயன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு, காத்திருப்பு போராட்டம் அறி விக்கப்பட்டது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் புறப்பட்டு வந்தனர். ஆனால், திருமண்டங்குடியி லிருந்து புறப்பட்ட கரும்பு விவசாயி களை காவல்துறையினர் அராஜக மான முறையில் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். இதே போல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகளைக் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய விவசாயிகளையும் போராட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே பலப் பிரயோகம் செய்து, அராஜகமான முறையில் கைது செய்து வேனில் ஏற்றியுள்ளனர்.  குறிப்பாக, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரனின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் விவ சாயிகள் பலர் காயம் அடைந்துள்ள னர். வேனுக்குள் ஏற்றிய பிறகும் விவ சாயிகளை காவல்துறையினர் தாக்கி யுள்ளனர். 

காத்திருப்புப் போராட்டமே துவங்காத நிலையில், ஆட்சியருடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று  அறிவித்து, மாநிலத் தலைவர் வேல் மாறன், மாநில துணைத்தலைவர் நல்லாக்கவுண்டர், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், மாநில துணைத்தலைவர் துரைராஜ், மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி.  செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள், காவல்துறையினரிடம் பேசிக் கொண்டிருந்தபோதே நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கரும்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  காவல்துறையின் இந்த அராஜ கத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன், தமிழக முதலமைச்சர் தலை யிட்டு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் பிரச்சனை களுக்கு முழுமையான தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.